பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனைவிக்கு எழுதிய பாக்கள்

செயச்சிறையுள் புக்கதுபோல் தீவினையைத் தும்சம்
செயச்சிறையுள் புக்கேன் சிரித்து.

கைமா முகத்துக் கணபதியின் மாமனருள்
மைமா பெறமுதலை வாயுற்றாங் - கைமா
உலகிலறம் செய்துபுகழ் ஒன்றிமுதல் ஆகும்
வலனுறவுற் றேன்சிறைவெம் வாய்.

கோனாட்சி நீக்கிக் குடியாட்சி ஏற்படுத்தித்
தானாட்சி செய்வலெனச் சாற்றியோன் - மீனாட்சி
என்றழைக்க உள்மகிழும் ஏந்திழையே உற்றனையோ
இன்றழைக்கக் காணா இடர்.

சிவந்துணையும் பெற்றஇரு சேய்துணையும் நல்ல
தவந்துணையு மாநிற்கும் தையால் - உவந்த
கொழுந்தனுங் கால்விலங்கைக் கொள்ளமதி குன்றி
விழுந்ததென் னோதீ வினை.

என்னுயிரே இன்னுயிரா என்றுமிவண் கொண்டுநிற்கும்.
உன்னுயிரே தன்னுயிரா உட்கொண்ட - என்னுரிய
மாதுலனும் சென்றனனோ வானூர் உனைப்பிரிந்துன்
காதலனிங் குற்றதுயர் கண்டு.


மன்னன் மனையும் மயங்குதல் உண்டெனில்
பின்னர் மயங்காரோ பேதையார்- நன்னுதால்
"இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.”

41