பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு சென்றன எல்லாம் செல்லுக.நாம்இனி நன்றுறும் வழியினை நவில்கிறேன் கேண்மோ:- என்னுயர் மக்கள் இருவரும் என்றும் நின்னடி தொழுது நிலைத்திவண் வாழ்தலே என்னுளம் கொண்டுளேன்; இஃதொன் றல்லது பொன்னகர் நிற்பினும் பொதியையில் நிற்பினும் வேற்றுமை கண்டிடேன் விளம்பினேன் உண்மையே : சாற்றிய இவ்வுரை தயைபுரிந் துளம்கொள். இத்திறம் செயலவி இலாதுபின் செல்வையேல் சித்தம் பரத்தின் செயல்போல் ஆகுக. மதியையும் மதிப்பையும் மறந்தமைத் துனர்க்குப் புதியவுரை கொடுவெனப் புகன்றதும் விந்தையே; மதிப்புமுதல் துறந்தநீ மதிப்பினை அவாவிடின் மதிப்பையும் பொருளென மதித்துளேன் வரைவளே னோ? உயிரின் குறிப்பினில் ஒப்பமிட் டனுப்பினேன். செயிர் அறு வழக்கினைச் செய்தலே துணிவுயான். இயம்பின கடன்களை இளையாது தீர்ப்பாய் நயம்பட யான் இவண் நானிலம் வாழ்கவே. {! மானநிலை கொண்டதனுள் வாழ்வள்ளி நாயகமே ஞானநிலை கொண்டதனுள் நன்கமர்ந்து - மோனநிலை எய்தலன்றோ நின்கடன்காண் எய்தியபின் பார்க்குநலம் செய்தலன்றோ நின்கடன்காண் செப்பு. க 64