பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது புலம்பல் பாக்கள் எண்ணரிய துன்பங்கள் எய்தியுள வெம்சிறையை நண்ணிடினும் யான் அஞ்சேன் நாவாயின் - எண்ணறியா தென்னோரென் தாள்நிதியை ஈயா தெனைக்கொடுக்கச் சொன்னாலும் யான் அஞ்சேன் சோர்ந்து. எ என்மனமும் என்னுடம்பும் என்சுகமும் என்னறமும் என்மனையும் என்மகவும் என்பொருளும் - என்மணமுங் குன்றிடினும் யான்குன்றேன் கூற்றுவனே வந்திடினும் வென்றிடுவேன் காலால் மிதித்து. ரு தமது புலம்பல் பாக்கள். செய்தகரு மப்பயனைச் சேர்த்தருளும் மெய்யேயான் செய்தவரும் பாவங்கள் தீர்ந்திலவோ - மெய்தொழுது நிற்பாரும் ஈங்குறுதல் நீதியோ நீதிநூல் கற்பாரும் அன்றென்ப காண். க எத்தனைதான் பாவம் இயற்றிடினும் மெய்தொழ வ அத்தனையும் நீங்குமென ஆன்றோருள்- எத்தனைபேர் கூறியுளார் அன்னாரின் கூற்றெல்லாம் என்மட்டில் மாறியுள தென்னோ வழுத்து. 2. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்" என்ப - ஏழையேன் தாழா துஞற்றித் தவம்புரிந்து மெய்கண்டும் வாழாதில் ஈங்குறலென் வம்பு.

F

6 81