பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

விதியியல்அறிதல் தாய் போல், வினையைத் தடிப்பித்து - கருமங்களை வளர்த்து, சேயின் பயனை-பிள்ளைகளின் சம்பாத்தி யங்களை, அதற்கே ஈயும்- அததற்கே கொடுக்கும், பிதா போல்-தந்தை போல, உயிர்க்கு- மனித உயிர்களுக்கு, பயனை - அதனதன் வினைப்பயன்களை, பயக்கும் - கொடுக்கும்.

க-ரை:-கடவுள் மனிதரது வினைகளைக் காத்து வளர்த்து அவரவர் வினையின் பயன்களை அவரவர்க்கு நல்குவர்.

-இன்றுமறஞ் செய்கின்ற பெண்ணரிய துன்பங்க ளென்றுமிவண் கொண்டுதுய ரீர்தரகுட்-சென்றிடுவ ரென்றுமிவ ணின்பமுறவிச்சித்தா லின்றுமுத னன்றுதரு கல்வினையை நாடு.

அ-ம் :-இன்று மறத்தைச் செய்கின்றார் இவன் என்றும் எண்ணரிய துன்பங்களைக் கொண்டு, துயர் ஈர் நரகுள் சென்றிடுவர்; இவன் என்றும் இன்பத் தை உற இச்சித்தால் நன்றைத் தரும் நல்வினையை இன்று முதல் நாடு.

ப-ரை :-இன்று-இக்காலத்து, மறம்செய்கின் றார்-பாவவினைகளைச் செய்கிற மனிதர், இவண்-இவ்வுலகில், என்றும்- (அவர்வாழும்) காலமெல்லாம். எண்ணரிய துன்பங்கள்-நினைத்தற்கரிய பலகொடிய துன்பங்களை. கொண்டு- நாயனித்து, துயர் ஈர்கர குன் - துன்பங்கள் உயிர்களை வருத்துகின்ற நிகை உலகத்துள், சென்றிடுவர் - (முதுமையுள்) புகுவர்;