பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________


              தவஞ் செய்தல்.

மும் ஒத்து வாழ்ந்திடுவாய்; தீக்குணம் இல்லாத வற்றையே செப்பிடுவாய்; போக்கைத் தரும் எஃதற் கும் உள்ளத்தை ஏக விடாய்; சால்பைத்தரும் எஃ தற்கும் உள்ளத்தை ஈ.

ப-ரை:-எஞ்ஞான்றும் - எந்நாளும், வாக்கு மனம் காயம் ஒத்து வாழ்ந்திடுவாய்-சொல்லும் நினைப் பும் செயலும் ஒத்திருக்குமாறு வாழ்வாய்; தீக்குணம் இல்லா தனவே செப்பிடுவாய் - தீங்கை விளைக்கும் தன்மை இல்லாத சொற்களையே சொல்வாய்; போக்கு தரும் எஃதற்கும் உல்லத்தை ஏக விடாய் - குறை வைத் தரும் எச் செயலுக்கும் உனது மனத்தைப் - போக விடாய்; சால்புதரும்-நிறைவைத்தரும், எஃதற் கும் உள்ளத்தை ஈ- எச்செயலுக்கும் உனது மனத் தைக் கொடு,

க-ரை:- எப்பொழுதும் நினைப்பும் சொல்லும் செயலும் ஒரேவாறாக இருக்குமாறு வாழ்; தீங்கை விளைக்காத சொற்களையே பேசு;குறவைக் கொடுக்கும் எச் செயலிலும் உனது நினைப்பை விடற்க; நிறைவைத் தரும் எச் செயலிலும் உனது நினைப்பைச் செலுத்துக,

      8-ம் அதி.--தவஞ் செய்தல்.
தவஞ்செய்த லொன்றேதான் றன்கருமஞ் செய்த லவஞ்செய்தன் மற்றையன வாமே - சிவஞ்செய்யு மெப்பணியுஞ் சென்றுமுன சென்றுந் தவஞ் செய்வார்க் கிப்புவியி லென்ப வினிது.
    அ-ம் :-தவத்தைச் செய்தல் ஒன்றே தன் கரு