உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் பதிப்பின் முகவுரை

இதனை முதனூலுக்குச் சற்றேறக்குறையச் சரியான மொழிபெயர்ப் பென்றே சொல்லலாம்; முத நூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளனவோ அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்னேன். மற்றைய வசன மேற்கோள்களுக்கு அவற்றிற்குரிய அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும், சில ங்களில் முதனூலாசிரியரது கருத்துக்களை நன் விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டி யும் குறைத்தும் மொழிபெயர்த்திருக்கிறேன். அன்றி யும்,

"கற்க கசடறக் கற்பவை; கற்றபின்
 நிற்க அதற்குத் தக"

என்றபடி, இந்நூலின் அரிய பொருள்களைத் தமிழுலகம் நன்குணர்ந்து கைக்கொண்டொழுகல் வேண்டும் என்ற எண்ணமே என் மனத்தின்கண் முற்பட்டு நின்றமையின்,பயில வழங்கும் வடமொழிகளை இதில் மிகுதியாகத் தொடுத்திருக்கிறேன். இவ்விரண்டின் பொருட்டும் அறிவுடையார் என்னை மன்னிப்பாராக. இந்நூலை மொழிபெயர்க்கவேண்டும் என்ற விருப்பம் என் மனத்தில் நெடுநாளாக இருந்ததேனும், அது நிறைவேற வாய்த்த சமயத்தை நோக்குங்கால், எல்லாம் வல்ல இறைவன் அருளை நினைந்து உருகும்படி யிருக்கின்றது. இராஜநிந்தனைக் குற்றம் செய்ததாக

14