பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மென்று முதல் பதிப்பின் முகவுரை ஆயுள்வரையில் நாடு கடத்தப்பட வேண்டு தீர்ப்பு விதிக்கப்பெற்று, கான் இவ்விடம் ஸென்ட்ரல் ஜெயிலில் இருக்கிறதும் தற்பொழுது ஹை கோர்ட் உத்தரவுப்படி எனது அப்பீல் முடிவுவரை நான் வேலையினின்றும் நீக்கப்பட்டு வெறுங் காவலில் வைக்கப்பட்டிருக்கிறதும், அநேகருக்குத் தெரிந்திருக் கும். உயிர்களுக்கு உதவுதலே கடவுளை ஆராதித்தல் என்னும் கொள்கையை யுடைய எனக்கு இங்ஙனம் கிடைத்த அவகாசம், எனது விருப்பத்தை நிறைவேற் றிக்கொள்ள அவன் அருளால் உண்டான நல்ல தருண மாகத் தோன்றியது. ஆதலின், இச்சமயத்தை இந் நூலை மொழிபெயர்ப்பதிலும் திருக்குறளின் முதற்பாக மாகிய அறத்துப்பாலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப் பதிலும் உபயோகப்படுத்தித் திருப்தியடைந்தேன். இவ்விடம் சென்ட்ரல் ஜெயில் சூபெரின்டென் டென்ட் மிஸ்டர். இ. எச். காட்ஸ்டென் (E.H, Gadsden) துரையவர்கள் நான் இந்நூலை மொழி பெயர்ப்பதற்குத் தம்மால் இயன்ற எல்லா செளகரி யங்களையும் செய்து தந்தமையின், நான் அன்னார்க்கு மிகவும் நன்றியறிதல் உள்ளவனாயிருக்கிறேன். காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.' கோயமுத்தூர், 1-10-1908. வ.உ.சிதம்பரம்பிள்ளை. 15