பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் இன்பத்தின் மர்மம்.

இன்பத்திற்குத் தாகம் அதிகம் ; அவ்வளவு, இன்பமின்மையும் அதிகம்; செல்வம் ஸ்திரமான பேரின்பத்தைக் கொண்டுவருமென்று நம்பித் தரித் திரர்களிற் பெரும்பாலார் செல்வத்தை அவாவுகின் றனர். ஒவ்வோர் அவாவையும் இச்சையையும் நிறை வேற்றிச் செல்வவந்தரிற் பெரும்பாலார் சரீர மெலி வாலும் சரீர வீக்கத்தாலும் வருந்துகின்றனர்: ஆனால், இன்பத்திற்குத் தரித்திரரினும் அவர் தூரத்தி லிருக்கின்றனர். காரியங்களின் இந்நிலைமையை நாம் ஆலோசித்துப் பார்த்தால், இன்பம் புறவுடை மைகளால் மாத்திரம் உண்டாவதில்லை யென்ற சிறந்த உண்மையும், துன்பம் புறவுடைமைகளின் இன்மையால் மாத்திரம் உண்டாவதில்லை யென்ற சிறந்த உண்மையும் நமக்கு விளங்கும் ; ஏனெனில், இன்பம் புறவுடைமையினின்றும், துன்பம் புறவு டைமையின்மையினின்றும் உண்டாகுமாயின், தரித் திசர் எப்பொழுதும் துன்பத்தை அநுபவித்தலையும், செல்வவந்தர் எப்பொழுதும் இன்பத்தை அனுபவித் தலையும் நாம் காணவேண்டும்; ஆனால், உண்மை இதற் கு மாறா யிருக்கின்றது. மிக மிகக் கொடிய துன்பத் தை அனுபவிப்பவர்களிற் சிலர் செல்வங்களும் போ கப் பொருள்களும் சூழ்ந்திருக்கப் பெற்றிருப்பதை நான் பார்த்திக்கிறேன். மிகமிக இனிய இன்பத்தை அநுபவிப்பவர்களிற் சிலர் வாழ்க்கைக்கு இன்றி யமையாத பொருள்களை மாத்திரம் கொண்டிருப் பதை நான் அறிவேன். செல்வங்களைச் சம்பாதித் '92