பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம்.

ஒழுக்கமுள்ளவர்களையும் பந்தப்படுத்துகிற, மிகுந்த வலிமையும் வஞ்சகமும் நுட்பமும் பொருந்திய அவாக்களைக் கொண்ட மனோ வுலகத்தையும் குறிக் குமாறு உபயோகிக்கின்றேன். உலகத்திலுள்ள துன்பங்களுக் கெல்லாம் சுய நயமே காரண மென்பதை அநேகர் ஒப்புக்கொள்வர். ஆனால், அச்சுயாயம் தம்முடைய தன்றென்றும் வேறொருவருடைய தென்றும் அவர் கூறி ஆன்மா வைக் கெடுக்கும் மயக்கத்துள் வீழ்கின்றனர். உங் கள் துன்பமெல்லாம் உங்கள் சொந்த சுயநயத்தின் பலன்களென்று நீங்கள் ஒப்புக்கொள்ள விருப்ப முடையவர்களா யிருக்கும் பொழுது நீங்கள் சுவர்க் கத்தின் வாயில்களுக்குச் சமீபத்தி லிருப்பீர்கள் ; ஆனால், உங்கள் சந்தோஷத்தைக் கவர்வது மற்ற வர்களுடைய சுயநய மென்று எவ்வளவு காலம் நீங்கள் நம்பிக்கொண் டிருக்கிறீர்களோ, அவ்வளவு காலமும் நீங்கள் உங்களால் ஆக்கப்பட்ட நரகத் துள் கைதிகளா யிருப்பீர்கள் இன்பமானது பூரண திருப்தியாகிய அகத்தின் நிலைமை ; அது சகல அவ,க்களும் நீங்கிய சந்தோ ஷமும் சாந்தியு மன்றி வேறன்று. அவாவை நிறை வேற்றுவதனால் உண்டாகும் திருப்தி நிலையற்ற தாகவும் தோற்றம் மாத்திரையாகவும் உள்ளது ; அத் திருப்தியால் அவா மேலும் மேலும் அதிகப்படுகின் றது. அவா சமுத்திரத்தைப் போல அடங்காதது; 94 |