பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

அவர் கற்பதற்குத் தயாராகவும் விருப்பமுடையவ ராகவும் இல்லை. யான் ஒரு குழந்தையை அறிவேன். அதன் தாய் அதனை இராக்காலத்தில் படுக்கைக்குக் கொண்டுபோன போதெல்லாம் எரிகின்ற மெழுகு வர்த்தியுடன் அது விளையாட விரும்பி அழுவதுண்டு. ஓர் இரவில் தாய் வெளியிற் போயிருந்த சமயத்தில் குழந்தை மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்தது. அது குழந்தையின் கையைச் சுட்டுவிட்டது ; அக் காலம் முதற்கொண்டு அக்குழந்தை மெழுகுவர்த்தி யுடன் விளையாட ஒரு போதும் விரும்பியதில்லை. அது தனது ஒரு மடச்செய்கையினால் பெற்றோர் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற பாடத் தைப் பூர்த்தியாகப் படித்துக்கொண்டது ; நெரு ப்புச் சுடுமென்ற ஞானத்தையும் அடைந்து விட் டது. சகல துன்பங்களுடைய இயல்புகளையும் நோக் கங்களையும் முடிவுகளையும் பூர்த்தியாக விளக்கு வதற்கு இவ்வொரு சம்பவமே போதுமானது. குழந் தை நெருப்பின் உண்மையான இயல்பை அறியாத அஞ்ஞானத்தால் வருந்தியது போலப் பெரிய குழந் தைகளாகிய மனிதர், தாம் அடைந்த போது தமக்கு வருத்தத்தைக் கொடுக்கும் பொருள்களின் உண்மை யான இயல்புகளை அறியாத தமது அஞ்ஞானத்தால் அவற்றை அடைய அவாவியும் அழுதும் அடைந்து வருந்துகின்றனர். இரண்டிற்கும் ஒரே ஒருவேற்றுமை தான் உண்டு ; பெரிய குழந்தைகளாகிய மனிதரின்