பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உலகம் மனத்தின் பிரதிபிம்பம்.


நீங்கள் எப்படி இருக்கின்றீர்களோ அப்படியே உங்கள் உலகமும் இருக்கின்றது. உங்கள் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்தின் தன்மைக்குச் சரியாக செய்யப்பட்டிருக்கின்றது. உங்கள் புறநிலைமை எவ்வாறிருந்தாலும் பெரிதன்று, உங்கள் புற நிலைமைகளெல்லாம் உங்கள் அகநிலைமை களின் பிரதிபிம்பங்களே யாகலான். உங்கள் அகத்தின் நிலைமை தான் பெரிது, உங்கள் புறத்தி லுள்ள ஒவ்வொன்றும் உங்கள் அகத்திலுள்ள வற்றிற்குச் சரியாகச் செய்யவும் திருத்தவும் படுமாக லான். எவையெல்லாம் உங்களால் இதுமுன் அறியப் பட்டிருக்கின்றனவோ அவையெல்லாம் உங்கள் அநுபவத்தில் அடங்கியிருக்கின்றன; எவையெல்லாம் உங்களால் இனிமேல் அறியப்படப் போகின்றனவோ அவையெல்லாம் உங்கள் அநுபவமாகிய வாயிலின் மூலமாகச் செல்ல வேண்டும்; ஆதலால், அவையெல் லாம் உங்கள் ஜீவனில் ஒரு பாகமாகும்.

உங்கள் நினைப்புக்களும், அவாக்களும், நோக்கங் களும் உங்கள் உலகமாகின்றன ; அழகும், இன்பமும், சுகமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும், அல்லது அழகின்மையும், துன்பமும், துக்கமுமாகிய உங்கள் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும்,உங்கள் அகத்துள் அடங்கியிருக்கின்றன. உங்கள் நினைப்புக்களால் -உங்கள் வாழ்க்கையை -உங்கள் உலகத்தை- உங்கள் பிரபஞ்சத்தை ஆக்குகிறீர்கள் அல்

12