பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம். நீங்கள் செல்வத்தை நேராக (ஒழுக்கத்தின் மூலமாக அல்லாது) அடைவதற்குக் கருதுதலும், செல்வம் சம் பாதித்த லொன்றையே உங்கள் வாழ்க்கையின்நோக்க மாகக் கொள்ளுதலும், செல்வத்தை அடைதற்கு நீங்கள் பேராசையோடு முயலுதலும் அறிவீனமா கும். இச்செயல்கள் முடிவில் உங்களுக்குத் தோல்வி யையே கொடுக்கும். உங்களை ஒழுக்கத்தில் நிறைவு டையவர்களாகச் செய்து கொள்வதையும், பிரயோ ஜனமும் பரோபகாரமுமான செயல்களைச் செய்வ தையும் உங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொள்ளுங் கள் ; எல்லாவற்றிற்கும் மேற்பட்டதாயும் மாறுதலில் லாததாயும் இருக்கிற நன்மையினிடத்து நம்பிக்கை யுடையவர்களாயிருங்கள். நீங்கள் உங்கள் சொந்தத்திற்காகக் செல்வத்தை விரும்பவில்லை யென்றும், ஆனால் அதனைக்கொண்டு நன்மை செய்தற்கும் மற்றவர்களைச் சுகப்படுத்தற் குமே அதனை விரும்புகின்றீர்களென்றும் கூறுகின் றீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்புவதன் உண் மையான நோக்கம் இஃதாயிருக்கும் பட்சத்தில், உங்களுக்குச் செல்வம் வந்து சேரும்; நீங்கள் செல்வ முடையவர்களாயிருக்கும் பொழுது நீங்கள் உங்களை அச்செல்வத்தின் சொந்தக்காரர்களாகக் கருதாது, அதனை நல்ல வழிகளில் செலவு செய்து காப்பாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட நிர்வாகிக ளென்று கருதும் பட்சத்தில், நீங்கள் உண்மையில் பலமும் பரநயமும் உள்ளவர்களே. ஆனால், நீங்கள்' 40