பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி. வெண்பா. நன்மை உருவான*மெய்யை நண்ணமுயல் வார்க்கிங்கு மன்னுகின்ற பல்பொருளும் மாண் துணையாம்;-தன்மையென ஒன்றும் உறுவதிலை ; உற்றாலும் அஃதெல்லாம் சென்றொழியும் மெய்யறிவால் தேய்ந்து.

  • மெய்-கடவுள். "மாண் - நல்ல. வான்* மீனை மேகம் மறைத்தல் போல் துன்பம் தேன்மானும் இன்பத்தைத் தேய்க்குமால்;--ஈன நரகம் சுவர்க்கம்முன் நண்ணும் இராத்தான் இரவிமுன் நண்ணல் போல் இங்கு.,
  • மீனை-நக்ஷத்திரத்தை. தவறல்கள் மேன்மைத் தலை சேர்க்கும் ஏணி *குவவார் படிகளெனக் கொள்வாய் ;-கவலை தரும் நட்டம் இலாபத்தை நல்கும்; பருவத்தில் கட்டம் சுகம்நல்கும் காண்.

குவவு ஆர்-பெருமை நிறைந்த. துன்பம் கடவுளியல் தூயசெயல் சொல்நினைப்போ டின்பம் தரும்நெறிகள் எய்துவிக்கும்;-மன்பதைகள் மேம்பா டுறுநெறியில் மேக இருள் * எல்லொளிகள் தாம்+பா டுறமன்னும் சார்ந்து.

  • எல்-பிரகாசமுள்ள, tபாடுஉற பெருமையுற.