பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைப்பின் மௌன வலிமை. அசையாத காரியசிந்தனையும் எக்காரியத்தையும் முடிக்கும். தெய்வநம்பிக்கையை ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதலால், நினைப்புச்சக்தி கள் ஒன்று சேருகின்றன ; நல்ல காரியசிந் தனையை ஒவ்வொரு நாளும் உறுதிப்படுத்துவதனால், செய்து முடிக்க வேண்டிய காரியத்தை நோக்கி நினைப்புச்சக்திகள் செல்லுகின்றன. நீங்கள் எந்த நிலையி லிருந்தாலுஞ் சரி, நீங்கள் வெற்றியையாவது பிரயோஜனத்தையாவது வலிமையையாவது எள்ள ளவேனும் அடைய வேண்டுமானால், நீங்கள் அமைதி யையும் நம்பிக்கையையும் வளர்த்து உங்கள் நினைப் புச்சக்திகளை ஒருமுகப்படுத்துவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வியாபாரிகளென்று வைத் துக்கொள்ளுவோம்; நீக்கமுடியாத ஒரு கஷ்டமோ நஷ்டமோ திடீரென உங்கள் பால் வருகின்றது. உடனே நீங்கள் அச்சத்தையும் கவலையையும் கொள் கின்றீர்கள் ; நீங்கள் உங்கள் புத்தியை இழக்கும் நிலை மைக்கு வந்துவிடுகின்றீர்கள். அத்தகைய ஒரு மனோ நிலைமையைக் கொண்டிருத்தல் அழிவையே கொடுக் கும்; ஏனெனில், கவலை அகத்துட் பிரவேசிக்கும் பொ ழுது, காரியத்தைச் சரியாகத் தீர்மானிக்கும் சக்தி நீங்கி விடுகின்றது. அச்சமயத்தில், நீங்கள் அதிகாலையிலாவது இராத்திரியிலாவது அமரிக் கையாயிருக்கும் ஒரு நேரத்தைத் தெரிந்துகொள் ளுங்கள் ; அந்நேரத்தில் நீங்கள் ஓர் தனித்த இடத் திற்காவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு எவ்வித