பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வட்மைக்கு பார்க்கம். திருக்கின்றனர். நீங்கள் ஆரோக்கியத்தை அடைய விரும்புவீர்களாயின், நீங்கள் கஷ்டமில்லாமல் வேலை செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். ஆத்திரப்படுத லும் கவலைப்படுதலும் அநாவசியமான காரியங்களைப் பற்றித் தொல்லைப்படுதலும் சரீர உடைவை உண்டுபண்ணுதலாம். மூளை வேலையும் சரீரவேலையும் இலாபத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கத் தக்கவை. தனது கையிலிருக்கிற வேலையைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் மறந்து யாதொரு கவலை யும் தொல்லையு மில்லாமல், நிலை:பான அமைதியோடும் பிடிவாதத்தோடும். தனது வேலையைச் செய்யும் மனிதன், கவலையோடும் ஆத்திரத்தோடும் வேலை செய்கிற மனிதனைப் பார்க்கிலும், அதிக வேலையைச் செய்வது மல்லாமல், அவன் விரைவில் இழக்கின்ற ஆரோக்கியத்தை உடையவனயும் இருப்பான், உண்மையான ஆரோக்கியமும் உண்மையான வெற்றியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே நிரழ்கின் றன ; ஏனெனில், நினைப்புலகத்தில் அவையிரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத விதத்தில் பின்னிப்பிணைக்கப் பட்டிருக்கின்றன. மன நேர்மை சரீர ஆரோக்கியத்தை உண்டுபண்ணுவது போல, ஒருவன் குறித்த காரியங்களை நேராகச் செய்து முடிக்குமாறும் செய்கின்றது. நீங்கள் உங்கள் நினைப் புக்களை ஒழுங்குபடுத்துக்கள் ; உங்கள் வாழ்க்கை ஒழுங்காகிலிடும். விருப்பும் வெறுப்பு மாகிய சலக்க: 76