பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும் நீரில் அமைதியாகிய நெய்யை வாருங்கள் ; கேடாகிய புயல், எவ்வளவு அச்சத்தை உண்டாக்கினும், வாழ்க் கையாகிய சமுத்திரத்தில் செல்லும் உங்கள் ஆன் மப்படரை உடைக்கச் சக்தியில்லாததாய்விடும். அப்படகை உற்சாகத்தோடும். அசையாத நம்பிச் கையோகம் செலுத்துவீர்களாயின், அது கரைக் குப் போய்ச் சேர்வது நிச்சயத்திலும் நிர்சாம். மற்றைப்படி அதனைத் தாக்கக்கூடிய பல புயல்கள் அதனைத் தாக்காமல் அதன் பக்கத்திற் கூடிச் சென்றுவிடும். நம்பிக்சையின் - பலத்தினாலேயே, நிலைநிற்கும் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகின்றது. நீங்கள் வெற்றியடைய விரும்பின், நீங்கள் அழியாது நிலைநிற்க விரும்பின், மெய்ப்பொருளிடத்து நம் பிக்கை வையுங்கள்; எல்லாவற்றையும் ஆள்கின்ற அம்மெய்ப்பொருளின் நீதியினிடத்து நம்பிக்கை வையுங்கள் ; உங்களுடைய வேலையிலும், அதனைச் செய்து முடிக்கும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை வையுங்கள். இந்நம்பிக்கையாகிய மலையின் மீது உங்கள் கட்டடத்தைக் கட்டுங்கள். சகல சந்தர்ப் பங்களிலும் உங்கள் மனச்சாக்ஷியின் மிகவுயர்ந்த தூண்டுதல்களைப் பின்பற்றுதலும், தெய்வத்தன்மை வாய்ந்த உங்கள் ஆன்மாவுக்கு உண்மையாக நடத் தலும், உங்கள் அக ஒளியையும் உங்கள் அக ஒலி யையும் நம்புதலும், ஒவ்வொரு நினைப்பின் பலனும் முயற்சியின் பலனும் எதிர்காலத்தில் உங்களுக்குக்