பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

வலிமைக்கு மார்க்கம்.


யில் முதல் தரம் பேசத்தொடங்கித் தவறிச் சபையாரின் அவமதிப்பை அடைந்த காலத்தில், அவர் “எனது பேச்சைக் கேட்பது ஒரு கௌரவம் என்று நீங்கள் நினைக்கும்படியான நாள் வரும்” என்று சொல்லியது சிருஷ்டி செய்யும் பலத்தைக் காட்டுகின்றது. எனக்குத் தெரிந்த ஒரு வாலிபன் துரதிர்ஷ்டங்களையும் கேடுகளையும் இடைவிடாது அடைந்து கொண்டிருந்த காலத்தில், அவனை அவனது சிநேகிதர் பரிகாசம் செய்து, மேல் பிரயத்தனஞ் செய்யாது நிறுத்திவிடும்படி சொல்லியதற்கு, அவன் “எனது நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் நீங்கள் கண்டு ஆச்சரியப்படும்படியான காலம் விரைவில் வரப்போகின்றது” என்று பதில் கூறினான்; அவனை எண்ணிறந்த கஷ்டங்களுக்குட்படுத்தி, அவனுக்கு வெற்றியாகிய கிரீடத்தைக் கொடுத்ததும் எதனாலும் எதிர்க்க முடியாததுமான மௌன வலிமையை அவன் கொண்டிருந்தா னென்பதை அது காட்டிற்று.


இவ்வலிமை உங்களிடத்தில் இல்லையானால், அதனை நீங்கள் அப்பியாசத்தினால் அடையலாம். வலிமையின் தொடக்கம் ஞானத்தின் தொடக்கத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் இவ்வளவு காலமும் மனதார இடங்கொடுத்துக் கொண்டிருந்த பயனற்ற அற்பக் காரியங்களை யெல்லாம் ஒழிப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும். உரத்த சிரிப்பு, அடங்காத சிரிப்பு; நிந்தனைப் பேச்சு, பயனற்ற பேச்சு, சிரிப்பை உண்டு