பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வலிமைக்கு மார்க்கம்.

ஆசிரியப்பா.

நாம்நம் கால்களால் நடப்பதற் காக
எல்லா நெறிகளும் இருக்கின் றன; அவை
ஒளிஇரு ளுடையவை; உயர்வுதாழ் வுடையவை;
அழிவழி யாமை, அகலம் ஒடுக்கம்,
எட்டும் படிகள்,எட்டாப் படிகள்,
நன்மை தீமை,நண்ணப் பெற்றவை;
அவற்றுள் ஒன்றைநாம் அடுத்ததில்
சென்றதன் நன்று தீதுணர லாமே.



உள்ளுறும் தூய்மையாம் உயர்ந்த ஒடுங்கிய
சுத்தமார் நெறியினில் தொடர்ந்து செல் வேமெனச்
சத்தியம் செய்துநம் தாள்களை வைத்துப்
பிறருடை இகழ்ச்சிப் பேச்சும் சிரிப்பும்
நிந்தைச் சொல்லும் சிந்தையுட் கொளாது,
நடந்திடை யூறுமுட் கடந்து, நலனார்
பசியநன் னிலத்தைப் பற்றிடின்,
நல்லன வெல்லாம் நாங்காண லாமே.


ஓடியே கழியும் ஒவ்வொரு கணத்திலும்
அன்பும் பொறுமையும் அளவிலா தாற்றி,
மாசெள் ளளவும் மனத்துறா தாண்டு,
வாய்மையி னின்று வழுவா தென்றும்
உயிர்கள் தமது செயிர்விட உதவின்,
ஆரோக் கியமும் அழகும் வலிமையும்


90