பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 வும் குள்ளமாகவும்தோன்றுவதால் அதற்கு சப்பை இரால் என்ற ஆங்கிலேய பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது அதின் தலையி லுள்ள உறுப்புகள், அகன்றும் தட்டையாயுமிருத்தலால் அப்படித் தோற்றுகிறது. சரியான கோறை இராலுக்கு இவைகள் தான் நீண்டு மேன்மையான மீசைகளாக இருக்கும். பாரை இரால் (Rock craw fish) அல்லது முள்ளுஇரால் (Spiny lobster), கப்பற்றுரைகளில் கட்டியிருக்கும் சுவரிலுள்ள கற்களிலும், காங்கிரீட்கட்டிகளிலும் அதிகமாயிருக்கும், உண்மையான கோரை இரால் கீழ்தேசத்து சமுத்திரங்களில் அகப்படுகிறதில்லை. இந்தக்குளங்களில் கடல் தாமரைகளும் இருக்கின்றன. இது ஐரோப்பாவிலுள்ள தினுசுகளைவிட நிறத்திலும் உருவத்தி லும் மிகக்குறைவாயிருக்கும். சில, நிறத்தில் குறைவாயிருந்தாலும் உருவத்தில் பெரிதாகிவிடுகிறது. பரம்பன், தூத்துக்குடி முதலிய இடங்களிலும், சென்னையிலும்கூட சாதாரணமாய் அகப்படக்கூடிய பெரிய டிஸ்கொசோமா (Discosoma) என்பது நம்பக்கூடாத அளவு மூன்றடி குறுக்களவு உடையதாய் சில வேளைகளில் பெருத்து விடு கிறது. இந்த கடல்தாமரை (Sea anemone) யிலிருக்கும் வட்டமான பரப்பு, ஒரு பெரிய பூ மலர்ந்திருப்பதைப்போல் மணலின்மேல் விரி ந்து கிடக்கும். மத்தியில் வாய் ஒரு சிறு வெடிப்புப்போன்ற ஓட் டையாயிருக்கும் ; அது பைபோன்ற இரைக்குடலுக்குச் செல்லும். அதின் வாயைச்சுற்றி வரிசையாய் கொடுக்குள்ள மீசைகள் இருக் கும். அவற்றால், தங்களிரையாகிய மீன்களைக்குத்தி பிரக்னையில் லாமலாக்கிவிடுகின்றன. சிலவற்றின் மீசைகள், நீண்டு திரட்சியாய் விறல்போன்ற குழாய்களாயிருக்கும். டிஸ்கோசோமா (Discosoma) என்ற பெரிய கடல்தாமரையைப்போல மற்றவைகளில் அவைகள் குட்டையாயும், தடிக்கம்பு போலுமிருக்கும். சிறிதாயிருந்தாலும் அதிக ஜாஸ்தியாயிருக்கும். கூட டத்தின் மத்தியிலுள்ள சிறு குட்டையில் நல்லத்தண்ணீர் மீன்களும், நீராமையும் இருக்கின் றன. முந்தியவற்றில், இந்தியாவில் உயர்ந்த சாப்பாட்டுக்குதவு மீனாகிய விரால் (Murrel) மீனும், அதிக மாய் மதிக்கப்பட்ட ஜாவா மீனாகிய கௌராமி (Gourami) அல்லது சங்கராவும் இருக்கின்றன. மதுராஸ் மீனிலாகாகாரர்கள் இந்த கௌராமி மீனை இத்தேசத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள்.. இவ் விருவகுப்பு மீன்களும் கூண்டுகட்டிக்கொள்ளும் மீன்கள். நீரிலிரு க்கும் செடிகளின் அடிகளைக்கொண்டு அக்கூண்டுகளைக் கட்டுகின்றன. தாய்தந்தையாகிய விரால் மீன்கள் கூட்டில் தங்கள் முட் அடைகாத்துக்கொண்டிருக்கும்பொழுது, வேறு யாரும் அதில் தலையிடுவதைச்சகிக்கிறதில்லை. யாராவது தெரியாத்தனத் தால், அதில் தலையிடுவார்களானால் அவைகள் துள்ளி விழுந்து அவ் வாறு வருபவரின், மூக்கையாவது விரலையாவது கௌவிக்கொள்ளு வது உண்டு என்பது தெரியும். ஒரு கைக்குட்டையை விசிறினால் அது உஷாராகி அதைப்பிடிக்க முயலும். டைகளை ள பனையேறிக்கெண்டை (Climbing perch) ஒரு மேசை செய்கு த்திலிருக்கும், நல்லதண்ணீர் மீன். அதுவும் விரால் மீனைப்போல்