தொல்காப்பியம் - இளம்பூரணம் ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கும் - பொருந்தாதார் இடத்தின் கண் பொருந்திய பக்கமும். if அஃதாவது, போரில்வழி நாடு கைத்தென்று கொண்டு உவத்தல். [கைத்து-கைய க்ப்பட்டது. உவத்தல் - வெகுளிவிட்டிருத்தல்) உதாரணம்:- "மாண்டனை பலவே போர்மிகு குருசிலீ மாதிரம் விளக்குஞ் சால்புஞ் செம்மையும் முத்துகடை மருப்பின் மழகளிறு பிளிற மிக்கெழு கடுந்தார் துய்த்தலைச் சென்று துப்புத்துவர் போகப் பெருங்கிளை புவப்ப ஈத்தான் றானா விடனுடை வளலும் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியம் எல்லா மெண்ணி னிடுகழங்கு தயும் கொன்னொன்று மருண்டனெ னடுபோர்க் கொற்றவ தெடுமிடல் சாயர் கொடுமிட றுமியப் பெருமலை யானையொடு புலங்கெட விறுத்துத் தடந்தா னாரை படித்திரை கவரும் முடந்தை நெல்லின் கழையமல் கழனிப் பிழையா விளை: ணடகப் படுத்து வையா மாலையர் வசையவர்க் கறுத்த பகைவர் தேளத் தாயினுஞ் சினவா மாகுத விறும்பூதாற் பெரிதே" (பதிற்று-ங2] என்பதனுள் பகைவர் நாடு கைக்கொண்டிருந்தவாறு அறிக. பகட்டினானும் ஆவினானும் துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்-பகட்டினா னும் ஆவினானும் குற்றம் தீர்ந்த சிறப்பினையுடைய சான்றோர் பக்கமும். பகட்டால் புரை தீர்ந்தார் வேளாளர். ஆவால் குற்றம் தீர்ந்தார் வணிகர். இன் விரு குலத்தினும் அமைந்தார் பக்கமும். அவர் குலத்தினுள் அளவால் மிக்க நீர்மைய ராதலின் வேறு ஓதப்பட்டது. உதாரணம்:- "உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர் அமிழ்த மியைவ தாயினு மினிதெனத் தமிய ருண்டலு மிலரே முனிவிலர் துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப் புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா கோன்றாட் பிறர்க்கென முயலுக ருண்மை யானே." (புறம்- க .உ] கடிமனை நீத்த பாலும்-கடிமனை நீத்த பக்கமும்.
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/107
Appearance