பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 தொல்காப்பியம் - இளம்பூரணம். கம் புல்லிய நெறித்து-அது பாங்காதல் அரிய சிறப்பினாற் பலநெறியானும் நில்லாத உலக த்தைப் பொருந்திய கெறியை உடைத்து, பாங்கருமையாவது, ஒருவற்கு ஒருதுணையாகாமை. நிலையாமை மூவகைப்படும், இளமை நிலையாமை செல்வம்நிலையாமை யாக்கை நிலையாமை என. இவற்றுள், இளமைநிலையாமை யாவது, "பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேற்கண்ண ளென்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோற்கண்ண ளாகுங் குனிந்து. [நாலடி-இளமை -எ] 39 ளகஉ செல்வம் நிலையாமையாவது, அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட மறுசிகை நீக்கி யுண்டாரும்-வறிஞராய்ச் 46 சென்றிரப்ப ரோரிடத்திற் கூழெனிற் செல்வமொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. (நாலடி-செல்லம்-க] யாக்கை நிலையாமையாவது முன்னர்க் காட்டுதும். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், " ஏறிய மடற்றிறம் " [அகத்திணை ருச] முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புறனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும், இதுபோல அதுவும் நிலையாமைநோந்திறம் பற்றியும் வருதலானும் அதற்கு இது புறனாயிற்று எஎ. மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும் கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பண்புற வரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியு மறத்தி னானும் ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற் பேஎ யோம்பிய போய்ப் பக்கமும் இன்னனென் றிரங்கிய மன்னை யானும் இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும் மின்னகை மனைவி போய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவற் றீர்த்த வேலிற் பெயர்த்த மனைவி வஞ்சி யானும் நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பா டஞ்சிய மகட்பா லானும் முலையு முகனுஞ் சேர்த்திக் கொண்டான் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகு மென்ப பேரிசை (கஅ)