பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசன் மயக்கத் தானும் தாமே யெய்திய தாங்கரும் பையுளும் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும் தனிமிகு சுரத்திடைக் கணவனை யிழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் கழிந்தோர் தேஎத்துக் கழிபட ருறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி யிழந்த தபுதார நிலையும் காதல னிழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇச் சொல்லிடை யிட்ட மாலை நிலையும் அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த தாய்தப வரூஉந் தலைப்பெய னிலையும் மலர்தலை யுலகத்து மரபுநன் கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு நிறையருஞ் சிறப்பிற் றுறையிரண் இடைத்தே. இது, வாஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- 'மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை' முதலாகத் 'தலையொடு முடிந்த நிலையொடு' கூடப் பத்தாகும் என்பர் சிலர், 'பூசல் மயக்கம்' முதலாகக் 'காடுவாழ்த்து' உட்பட வருவனவற்றொடும் இருவகைப்பட்ட துறையை யுடைத்து, ர்கங் [எனவே, முற்கூறிய பத்தும் ஒருவகை யென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.) மாற்று அருங் கூற்றம் சாற்றிய பெருமையும் - மாற்றுதற்கு அரிய கூற்றம் அருமெ னச்சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும். உதாரணம்:-- 15 "இருங்கட னுடுத்தவிப் பெருங்கண் மாநிலத் துடையிலை நடுவணத் திடைபிறர்க்கின்றித் தாமே யாண்ட வேமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ங் தனரே அதனால், மீயுங் கேண்மதி யத்தை வீயா துடம்பொடு நின்ற வயிரு மில்லை மடங்க லுண்மை மாயமோ வன்றே