பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Mrஉஉ இனிக் காமப்பகுதி வருமாறு:- தொல்காப்பியம் - இளம்பூரணம் "மலைபடு சாந்த மலர்மார்ப யாநின் பலர்படி செல்வம் படியேம் - புலர்விடியல் வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற் கண்டனங் காண்டற் கரிது" [வெண்பா-பாடாண் -எ இஃது ஊடற்பொருண்மைக்கண் வந்தது. இனி, இயற்பெயர் சார்த்தியும் வரும். "வையைதன் நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லா னேராதார் போர்முற்றொன் றறியாத புரிசைசூழ் புனலூ ரன்” அக. என்பது குறிப்பினாற் பாட்டுடைத்தலைமகனே கிளவித்தலைமகனாக வந்தது. பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவனுயர்கூடல் தேம்பாய வவீழ்நீலத் தலர்வென்ற வமருண்கண் வந்துகோட் டெழில்யானை யொன்னாதார்க் கவன்வேலிற் சேந்துநீ யினையையா லொத்ததோ சின்மொழி." 26 இது காமத்தின்கண் வந்தது. காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினு மென்மனார் புலவர். (கலி-மருதம்-உ] இது, கடவுள்மாட்டு வருவதோர் பாடாண்பக்கம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்:-- காமப்பகுதி கடவுளும் வரையார்-காமப்பகுதி கடவுள்மாட்டும் வரை யார், ஏனோர்பாங்கினும் (வரையார்) என்மனார் புலவர்-ஏனோர்மாட்டும் வரையார் என்பர் புலவர். [கலி - குறிஞ்சி-உக] (உஉ) என்றது, கடவுள் மாட்டுத் தெய்வப்பெண்டிர் நயந்த பக்கமும் மானிடப்பெண்டிர் நயந்த பக்கமும் பாடப்பெறும் என்றவாறு, உதாரணம்:- "நல்கினு நாமிசையா ணோமென்னுஞ் சேவடிமேல் ஒல்கினு முச்சியா ணோமென்னும்-மல்கிருள் இது தெய்வப்பெண்டிர் நயந்த பக்கம். ஆட லயர்ந்தாற் கரிதா லுமையாளை ஊட லுணர்த்துவதோ ராறு." [வெண்பா-பாடான் - சஅ] இனிது மாடப்பெண்டிர் நயந்த பக்கம். "அரிகொண்ட கண்சிவப்ப வல்லினென் னாகம் புரிகொண்ட நூல்வடுவாப் புல்லி - வரிவண்டு பண்ணலங்கூட் டுண்ணும் பனிமலர்ப் பாசூரென் உண்ணலங் கூட்டுண்டானூர்." [வெண்பா-பாடாண்-•]