பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் 66 பருவ மென்றினை பாலும் பெய்தன கருவிரற் கிள்ளை கடியவும் போகா பசுமூ தந்திக் கடைலன வாடப் பாசிப் பக்கப் பனியீர்ப் பைஞ்சுனை விரியிதழ்க் குவளை போல வில்லிட் டெரிசுடர் விசும்பி னேறெழுந்து முழங்கக் குன்றுபனி கொள்ளுஞ் சாரல் இன்றுகொ றோழி யவர்சென்ற நாட்டே." இஃது இருத்தற்பொருண்மைக்கன் வந்ததேனும், முதற்பொருளானும் கருப்பொரு ளானும் குறிஞ்சியாயிற்று. "வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க் கோடாது நீர்கொடுப்பி னல்லது - கோடா எழிலு மிலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து." [திணைமாலை நூற் கரு] இது கற்பிற் புணர்வு; பொருளாற் குறிஞ்சியாயிற்று. "படாஅ தோழி பெங்கண்ணே கொடுவரி கொன்முரண் யானை கனவ நன்மலை நாட னசையி னானே." இஃது இரங்கற்பொருண்மையேனும் முதற்பொருளானும் கருப்பொருளானும் குறிஞ் சியாயிற்று, பிறவும் அன்ன பாலைத்திணைக்குச் செய்யுள்:- கஎ "அறியாய் வாழி தோழி யிருளற விசும்புடன் விளக்கும் விரைசெலற் றிகிரிக் கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை யுழிஞ்சில் உள்ளுன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொ ளியலின் விழுத்தொடை மறனர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுக வின்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும் இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லார் நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதல ரென்றி நீயே." [அகம்-குஙு] இதனுள் பாலைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் பிரிவும் வந்தவாறு கண்டு கொள்க. +