பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தொல்காப்பியம் - இளம்பூரணம் அளியின் மையி னவணுறைவு முனைஇ வாரற்க தில்ல தோழி கழனி வெண்ணெல் லரிஞர் பின்றைத் ததும்புந் தண்ணுமை வெரீஇய நடந்தா ணாரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை அகம்டற் சேக்குந் துறைவன் இன்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே." [அகம்-சய) இது முதலும் கருவும் இரங்குதற் பொருண்மையும் வந்த நெய்தற்பாட்டு. "அங்கண் மதிய மாவின்வாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி ஏதின் மாக்களு நோவர் தோழி என்று நோவா ரில்லைத் தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே.' இது திணைநிலைப்பெயரானும் இரங்கற்பொருண்மையானும் நெய்தலாயிற்று. "கங்குலும் பகலுங் கலந்துக் வொன்றி வன்புறை சொல்லி நீத்தோ ரன்புறு செய்தி யுடையரோ மற்றே." இஃது இரங்கற்பொருண்மையான் நெய்தலாயிற்று. "சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி வைகலு மிரவுக்குறிக் கொண்கனும் வந்தனன் விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே." [சிற்றடக்கம்] இது புணர்தற்பொருளாயினும் நிலத்தான் நெய்தலாயிற்று. "கோட்டக மலர்ந்து கொழுங்கொடி யடம்பி னற்றுறை யணிநீர்ச் சேர்ப்பவிப் பொற்றொடி யரிவையைப் போற்றினை யளிமே." இது பாலைக்குரித்தாகிய பிரிவுநிமித்தமாயினும் நிலத்தான் நெய்தலாயிற்று.(உச) உரு. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். இது, நடுவணைந்திணைக் குரிய தலைமக்களைக் கூறி, அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று. + இ - ள் :- அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் அடித்தொழில் செய்வார் பக்கத்தினும் வினைசெய்வார் பக்கத்தினும், கடிவரை இல (மேற் சொல்லப்பட்ட புணர் தல் முதலான பொருளைக் கூறல்) கடிந்து நீக்கும் நிலைமையில்லை, புறத்து என்மனார் புலவர்-ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கண் என்று சொல்வர் புலவர். புணர்தல் முதலான பொருள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'வினைசெய் வார்' என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க. இவர் அகத்திணைக்கு உரியரல்ல ரோ வெனின், அகத்திணையாவது அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன் பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவை யெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்