பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் கூற்று உணர்த்திய சூத்திரம் காலப் பழமையாற் பெயர்த்தெழுதுவார் விழ எழுதினார் போலும். ஆசிரியர் இச்சூத்திரத்தானும் பொருள் கொள்ள வைத்தமையின், தலை மகள் கூற்று வருமாறு, தலைமகள் பிரிதலுற்ற தலைமகன் குறிப்புக் கண்டு கூறுதலும், பிரிவுணர்ந்து கூறுதலும், பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறுதலும், உடன் போவல் எனக் கூறுதலும், இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லி விட்டனவும், தமர்வந் துற்றவ ழிக் கூறுதலும், மீளலுற்ற வழி ஆயத்தார்க்குக் கூறிவிட்டனவும், பிரிவாற்றாமை யும், ஆற்றுவல் என்பது படக் கூறுதலும், தெய்வம் பராவலும், பருவங்கண்டு கூறுத லும், வன்புறை எதிரழிந்து கூறுதலும் இவையெல்லாம் கூறப்படும். பிரியலுற்ற தலைமகன் தறிப்புக்கண்டு கூறியதற்குச் செய்யுள் :- "நெஞ்சு நடுக்குறக். கேட்டுங்கடுத்துந்தாம் அஞ்சிய தெல்லா மணங்காகு மென்னுஞ்சொல் இன்றீங் கிளவியாய் வாய்மன்ற கின் கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானும் இதுவொன்றுடைத்தென வெண்ணி யதுதேர மாசில்வான் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோல் தொடியிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ இடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெஞ் செய்பொருண் முற்று மளவென்ற நாயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலேமாயில் தொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயின் நொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று சொல்லென் னுயிர்." [கலி-பாலை-உங] பிரிவுணர்ந்த தலைமகள் தலைமகனுடன் கூறியதற்குச் செய்யுள்:- "செவ்விய தீலிய சொல்லியவற்றொடு பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாதல் யான்யாங் கறிகோ மற்றைய அகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகன்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி; செல்லினிச் சென்றுநீ செய்யும் வினைமுற்றி அன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை என்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்குரின் செம்மல் சிதையத் தவலருஞ் செய்வினை முற்றாமலாண்டோர் அவலம் படுதலு முண்டு.' (கலி-பாலை-க்அ]