பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம். பிரிவுணர்த்திய தோழிக்குக் கூறியதற்குச் செய்யுள்:- அருளு மன்பு நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின் உரவோ ரூரவோ ராக மடவ மாக மடந்தை நாமே." "செல்லாமை யுண்டே லெமக்குரை மற்றுநின் வல்லரவு வாழ்வார்க் குரை." (குறள்- ககருக] என்பதும் அது. 66 உடன்போக்கு ஒருப்பட்ட தற்குச் செய்யுள்:- சிலரும் பலருங் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச் சிறுகோல் வலந்தன என்னை யலைப்ப அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே." (நற்றிணை-சேக] இடைச்சுரத்து ஆயத்தார்க்குச் சொல்லிவிட்டதற்குச் செய்யுள்.- "சேட்டல முன்னிய விரைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர் யாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின் ஆரிடையிறந்தன வென்மின் ளிேறை முன்கையென் னாயத் தோர்க்கே." (ஐங்குறு-அச] "கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவனெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்கள் நற்றோ ணயந்துபா ராட்டி ஏற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.[ஐங்குறு - ஙஅரு] தமர் வந்துற்றவழிக் கூறியதற்குச் செய்யுள் :- அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண்டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வ லென்னையை மறைத்த குன்றே." [ஐங்குறு-கூகஉ மீண்டு வருவாள் ஆயத்தார்க்குக் கூறிவிட்டதற்குச் செய்யுள் :-- "கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றைக் குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரநனி வாரா நின்றன ளென்பது