பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

er jo உதாரணம்:-- தொல்காப்பியம் - இளம்பூரணம் " அடும்புகழ் பாடி யழுதழு தாற்றா திடும்பையுள் வைகி யிருந்த - சுடும்பொடு கைவண் குரிசில்கற் கைதொழுது செல்பாண தெய்வமாய் நின்றான் றிசைக்கு." [வெண்பா-பொது-ககூ. இவையெல்லாம் எரந்தைக்கு உரித்தாக ஓதப்பட்டணவேனும், "ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும், வருவகை தானே வழக்கென மொழிப்" [பொருளியல்-உஅ} என்றதனான், மறத்துறை ஏழிற்கும் கொள்ளப்படும். ஈண்டு ஓதப்பட்ட இருபத்தொரு துறையினும் நிரைமீட்டற் பொருண்மைத் தாகிக் கரந்தையென ஓதப்பட்டன் ஏழா யின. கரந்தையாயினவாறு என்னையெனின், வெறியாட்டும் வள்ளிக்கூத்தும் மலை சார்ந்த இடத்து வழங்குதலின், வந்த நிலத்திற்கு உரிய பொருளாகி வந்தன. பூவை நிலையும் அந்நிலத்தைச் சார்ந்து வருவதோர் தெய்வமாதலின், அங்கிலத்தின் கருப் பொருளாகி வந்தது. கற்கோள்நிலை யாறும் உன்னநிலையும் முடியுடை வேந்தர் சூடும் பூவும் கழல்நிலையும் ஏனையவற்றிற்கும் பொதுவாகலான், எடுத்துக்கொண்டகண்ணே கூறுதல் இலக்கணமாதலின் ஈண்டு ஓதப்பட்டதென வுணர்க, பன்னிருபடலத்துள் கரந்தைக்கண் புண்ணொடுவருதல் முதலாக வேறுபடச் சிலதுறை கூறினாராகலின், புண்படுதல் மாற்றோர் செய்த மறத்துறையாகலின், அஃது இவர்க்கு மாறாகச்கூறலும் மயங்கக்கூறலுமாம். ஏனையவும் இவ்வாறு மயங்கக்கூறலும் குன்றக்கூறலும் மிகைப்படக் கூறலு மாயவாறு எடுத்துக்காட்டின் பெருகுமாதலான், உய்த்துணர்ந்து கண்டு கொள்க. இத்துணையும் கூறப்பட்டது வெட்சித்திணை. சச. வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ன்:- வஞ்சி முல்லையது புறன்-அஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்தி ணைக்குப் புறனாம்.எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தன்று-அஃது ஒழியாத மண்ணை நச்சுதலையுடைய வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல் குறித்தது. ஒழியாத மண்ணை நச்சுதலாவது, வேண்டிய அரசர்க்குக் கொடாமை, "அகத்திணை மருங்கின் அரிறப உணர்ந்தோர், புறத்தினை யிலக்கணம் திறப்படக் கிளப்பின்" [புறத்-க] என்பதனைக் கொணர்ந்து உரைத்துக்கொள்க, இவ்வுரை இனி வருகின்ற திணைக்கும் ஒக்கும். அதற்கு இது புறனாகியவாறு என்னையெனின், "மாயோன் மேய காடுறை யுலகமும்' (அகத்-ரு] கார்காலமும் முல்லைக்கு முதற்பொருளாதலானும், பகைவயிற் சேறலாகிய வஞ்சிக்கு நிழலும் நீருமுள்ள காலம் வேண்டுதலானும், பருமரக் காடாகியு மலைசார்ந்த இடம் ஆகாமையானும் அதற்கு இது சிறந்ததென்க. அன்னதாகல் முல்லைப்பாட்டினுள் "கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற் சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி வேட்டுப் புழையருப்ப மாட்டிக் காட்ட