பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - களவியல் சுடு

வார்ப்புரு:Left-marginமாரி யெண்கின் மலைச்சுர்ர நீளிடை
நீநயந்து வருத லெவனெனப் பலபுலந்
தழுதனை யுறையு மம்மா அரிவை
பயங்கெழு பலலின் கொல்லிக் குடவரைப்
பூதம் புணர்த்த புதிதியல் பாவை
விரிகதி ரிள வெயிற் றோன்றி யன்னநின்
னாய்நல முள்ளி வரினெமக்
கேம மாகு மலைமுத லாறே.”

(நற்றிணை - ள்க)

எனவும் வரும்.

 தாளர் ணெதிரும் பிரிவி னானும் என்பது - தாளாண்மை யெதிரும் பிரிவின்கண்ணும்என்றவாறு. எனவே நெட்டாறு சேறலன்றி அணிமைக்கண் பிரிவென்று கொள்க.
 

வார்ப்புரு:Left-margin'இன்றே சென்று வருவது நாளைக்
குன்றுழி யருவியின் வெண்டேர் மூடுக
விளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீசு 2கொள்ளியிற் பைம்பயிர் துமியக்
கோலியற் செலவின் மாலை யெய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாக மடைந்துவக் குவமே.”

(கு.றுக் - NT «• ]

பிரித் தவழிக் கூறியதற்குச் செய்யுள் :-

"ஓம்புமதி வாழியோ வாடை 4பாம்பின்
றூங்குதோல் கடுக்குந் துவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின் மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.”

(குறுந் = உாகூடு)

எனவும் வரும்.

 நாணுதெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது - நாணந் தலைவிநெஞ்சினை வருத்துதலானே நீக்கி நிறுத்துதற்கண்ணும் என்றவாறு.
 
  அஃது, அலராகு மென்றஞ்சி நீக்குதல். அவ்வழித் தலைவன் கூற்று நிகழும் என்ற

வாறு. அவ்வழி இவ்வாறு கூறுகின்றது புனைந்துரையென்று கருதிக் கூறுதலும் மெய் யென்று கருதிக் கூறுதலும் உளவாம்.

'களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
வெளிப்படுத் தோறு மினிது.”

(குறள் - காசடு)

 இது புனைந்துரையென்று கருதிக் கூறியது.

உறாஅ தூரறி கௌவை யத்னைப்
பெறாஅது பெற்றன நீர்த்து.”

(குறள் - காச.-)

'ஊரறிந்த கௌவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெறாது

பெற்ற நீர்மைத்தாகக் கொள்' என்றமையானுந் தமர் வரைவுடன்படுவர் எனக் கூறியவாறாம். இது மெய்யாகக் கொண்டு கூறியது.


(பிரதி) -1. யெண்கினம் வலிதரு. 2. கொள்ளிநெற்பயிர் துமிப்பக். 3. காலையிற் செலலி. . 4. பாப்பின். !