பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்- இளம்பூரணம்

தடித்த எழுத்துக்கள்: சுசு

     வரைதல் வேண்டி,..புல்லியவெதிரும் என்பது- வரைந்துகோடல் வேண்டித்

தோழியாற் சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த கிளவிபொருந்திய வெதிர்ப்பாட்டுக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

      அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல்.
      

  "நல்லுரை யிகந்து புல்லுரைத் தாஅய்
              பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல
              உள்ளத் தாங்கா வெள்ள நீந்தி
              யரிதவா வுற்றனை நெஞ்சே 2நன்றும்
              பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு
              மகவுடை மந்தி போல
              வகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

(குறுந் - உசு)

 எனவரும்.
 
 வரைவுடம் படுதலும்- தோழி கூறிய சொற்கேட்டு வரைவடம்படுதற் கண்ணுங்

கூற்று நிகழும் என்றவாறு.

   "ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
          சூர் நசைக் 4கனையாய் நடுங்கல் கண்டே
          நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
          நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
          பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.”

(குறுந் - - இட)

என வரும்.

  ஆங்கதன் புறத்தும் என்பது---அவ் வரைவுகிகழ்ச்சிக் கண்ணும் (கூற்று நிகழும்என்றவாறு. செய்யுள் வந்த வழிக்காண்க.
  
 புரைபட வந்த மறுத்தலோடு தொகைஇ என்பது - குற்றம்பட வந்த மறுத்த

லொடுகூட என்றவாறு.

அஃது அவர் மறுத்தற் கண்ணுந் தலைமகன் மாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு. அதற்குச்செய்யுள்:-

"பொன்னடர்ந் தன்ன லொள்ளிணர்ச் செருந்திப்
      பன்மலர் வேய்ந்த நலம்பெறு 5கோதைய
      டிணிமண லடைகரை யலவ னாட்டி
      6யசையின ளிருந்த வாய்தொடிக் குறுமக
      ணலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும்
      பெறலருங் குரைய ளாயி ன7 றந்தெரிந்து
      நாமுறை தேஎ மரூஉப் பெயர்ந் தவனோ
      டிருநீர்ச் சேர்ப்பி னுப்புட னுழுதும்
      பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
      படுத்தனம் பணிந்தன மடுத்கன மிருத் தபிற்
      தருகுவன் கொல்வோ தானே விரிதிரைக்
      கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர்த்


(பிரதி) - 1. யிகழ்ந்த. 2. என்றும். 3. அஞ்சொ. 4. தணையாய். 5. தெரிகைய. 6. யசையுள. 7. னந்தில் தெரிதுகாமுனைப் பெயார் தவனோ டிரு நீர்ச் சேர்ப்பினும். புட்டனுழும.