பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௭௮ தொல்காப்பியம் - இளம்பூரணம்

கட்டுரையின்மை ஆவது—கூற்று நிகழ்தலின்மை.

இவையெல்லாம் கலக்கமில்லாத நிலைமையாதலிற் பெருமை சான்ற இயல்பாயின.

பொய்தலையடுத்த மடலின் கண்ணும் என்பது—பொய்ம்மையால் மடலேறுவன் எனத் தலைவன் கூறியவழியும் வெறுத்த உள்ளத்தளாய்க் குறிவழிச் செல்லாளாம்.

கையறு தோழி கண்னீர் துடைப்பினும் என்பது—தோழி கையினால் தலைவி கண்ணீர் துடைத்தவழியுங் குறிவழிச் செல்லாளாம்.

வெறியாட்டிடத்து வெருவின் கண்ணும் என்பது—தலைவி வேறுபாடு எற்றினாயிற்ரெனச் செவிலி வெறியாட்டுவிக்கவரும் அச்சத்தினானுங் குறிவழிச் செல்லாளாம்.

குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் என்பது—தலைவன் செய்த குறியை ஒப்புமைபற்றிச் சென்று அஃது அல்வழி மருளுதற்கண்ணும் குறிவழிச் செல்லாளாம்.

அஃதாவன புள்ளெழுப்புதல் போல்வன. அவைபெற்றுப் புள்ளரவம் எழும். அவ்வாறு மருளுதல்.

வரைவுதலை வரினும் என்பது—தலைவன் வரையவருகின்ற நாள் அணித்தாகவரினும் குறிவழிச் செல்வாளாம்.

கள வறிவுறினும் என்பது—களவினைப் பிறர் அறியினும் குறிவழிச் செல்லாளாம்.

தமர்தம் காத்த காரண மருங்கினும் என்பது—தன்னைத் தமர் காத்த காரணப் பக்கத்தினும் என்றவாறு.

அஃது ஐயமுற்றுக் காத்தல்.

அவற்றுள் வேற்று வரைவு வரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறிய செய்யுள்;—

அன்னை வாழிவேண் டன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை யென்னை யென்று மியாமே யிவ்வூர் பிறிதொன் றாகக் கூறு மாங்கு மாக்குமோ வாழிய பாலே.” [ஐங்குறு - ௱௰] எனவரும்.

நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தமை மறைத்தற்குச் செய்யுள்:—

"துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதவென் [மம்மர் வாண்முக நோக்கி யன்னை நி னவல முரையென் 2றனளே கடலென் பஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலஞ் 3சிறுமனை சிதைத்ததென் றேனே. எனவரும்.

முட்டுவயிற் கழறற்குச் செய்யுள்:

"இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர் [விழவின் றாயினுந் துஞ்சா தாகு மல்ல லாவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சான்(பிரதி)- 1. புள்வரவு. 2. றோளே. 3. சிறுவன.