பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல் ௱௮௧

புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னணியிழா யுள்ளுருகு கெஞ்சினேன் யான்.” [ஐந்திணையைம் - ௫௰] கனைபெய்ந் நடுநாள்யான் கண்மாறக் குறிபெறான் புனையிழா யென்பழி நினக்குரைக்குந் தானென்ப துளிநசை வேட்கையான் விசையாடும் புள்ளிற்ற னளிநசை[இ] யார்வுற்ற வன்பினேன் யானாக.” [கலித் - ௪௬] எனவரும்.

வரைவுதலை வந்தவழிக் கூறிய செய்யுள்:— "கொல்லைப் புனத்த வகில் சுமந்து கல்பாய்ந்து. வானி னருவி ததும்பக் கவினிய நாட னயனுடைய னென்பதனா னீப்பினும் வாடன் மறந்தன தோள்.” [ஐந்திணையெழு - ௨] நயனுடைய னென்றதனான் வரைவு தலைவந்தமை யறிந்து கூறினாளாம். "இலைபடர் தண்குளவி வேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த ளின்வண் டிமிரும் வரையக நாடனும் வந்தான்மற் றன்னை யலையு மலைபோயிற் றன்று." [ஐந்திணையெழு - ௩] எனவரும்.

களவறிவுற்றவழிக் கூறிய செய்யுள்:— யாங்கா குவமோ வணிநுதற் குறுமக [டேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற் றெவ்வாய்ச் சென்றனை யவணெனக் கூறி யன்னை யானாள் கழற முன்னின் றருவி யார்கும் பெருவரை நாடனை யறியலு மறியேன் காண்டலு மிலனே வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து சுனைபாய்ந் தாடிற்று மிலனென நினைவிலை பொய்ய லந்தோ வாய்த்தனை யதுகேட்டுத் தலையிறைஞ் சினளே யன்னை செலவொழிந் தனையா] லணியாம் புனத்தே.” [நற்றிணை - ௧௪௭] எனவரும்.

தமர் தற்காத்த காரணப் பக்கத்திற்குக் கூறிய செய்யுள்:— பெருநீ ரழுவத் தெந்தை தந்த” என்னுங் களிற்றியானை நிரையுள்,

பல்பூங் கான வல்கினம் வருதல் கவ்வை நல்லணங் குற்ற விவ்வூர்க் கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை கடிகொண் டனளே தோழி பெருந்துறை யெல்லையு மிரவு மென்னாது கல்லென(பிரதி)-1. பானாக. 2. குற்றத் திவ்வூர்க்