பொருளதிகாரம் - களவியல்
௱௩௯
“பெருங்க ணாய முவப்பத் தந்தை
நெடுந்தேர் வழக்கு நிலவுமணன் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
யருளினு மருளாளாயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியன்மா னெஞ்சே யென்னதூஉ
மருந்துய ரவலந் தீர்க்கு
மருந்து பிறிதில்லையா னுற்ற நோய்க்கே.” [நற்றிணை-௱௪௰]
இதனுள் ‘அருளினும் அருளாளாயினும்’ என்றமையால் கூட்டமின்மையும், ‘பின்னிலை முனியல்’ என்றமையால் இரந்து பின்னிற்பானாகத் துணிந்தமையும், தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க.
“நறவுக்கம ழலரி நற[வு] வாய்விரிந்
திறங்கிதழ் கமழு மிசைவாய் நெய்தற்
கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர்
நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி
யொண்சுணங் கிளமுலை யொருஞான்று புணரி
னுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக்
கைதை வேலி யிவ்வூர்ச்
செய்தூட் டேனோ சிறுகுடி யானே.”
பெரியீரெனச் சேட்படுத்தவழிக் கூறியது.
“கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக்
கரந்த காமங் கைந்திறுக் கல்லாது
நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி
யரைநாள் யாமத்து விழுமழை கரந்து
கார்மலர் கமழுங் கூந்தற் றூலினை
நுண்ணூ லாகம் பொருந்தினள் வெற்பி
னிளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டுவழி படரத் தண்மலர் வேய்த்து
வில்வகுப் புற்ற நல்லாங்கு குடச்சூ
லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து
துஞ்சி யாமத்து முயங்கினள் பெயர்வோ
ளான்ற கற்பிற் சான்ற பேரிய
லம்மா அரிவையோ வல்லள் தெனாஅ
தாஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கலிரம் பெயரிய வுருகெழு கவாஅ
னேர்மலை நிறைசுனை யுறையுஞ்
சூர்மகள் கொல்லெனத் துணியுமென் னெஞ்சே.”[அகம்-௧௯௮]
இது தோழியிற்கூடிய தலைமகன் கூற்று.
“அவரை பொருந்திய பைங்குர லேனற்
சவரி மடமா கதூஉம் படர்சாரன்
கானக நாட மறவல் வயங்கிழைக்
கியானிடை நின்ற புணை.” [ஐந்திணையெழு.1]
1. ‘துணிந்தமையானும்’ எனப்பிரதியில் உள்ளது. 2. ‘றூவிநை’ என்பது பிரதி. 3. ‘தெஅனாங்காய்’ என்பது பிரதி.