பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்

. லாம் விதிகளையும் விலக்குகளையும் அறிந்து முத்தி பெறுவதற்கு விரும்பி, 'உயர்ந்த தெய்வத் தன்மை வாய்ந்த ஆரிய பாடையால் அருளிய வனப்பம் நிறைந்த சீர்களையுடைய, முறையாக வருகின்ற நான்கு வேதங்கள் மிகப் பெரிய உலகத்தின் கண் நெருக்கும் பகைவரால் மறைக்கப் படும் பொருள்கலாதலால், கெடாத்தன்மையில் நிலைபெறும்படியாக அவ்வேதங்களின் தாழ்ந்த பொருள்களை நீக்கி, உயர்ந்த பொருள்கள் அடங்கலும் அமிழ்தினும் இனிய தமிழ் மொழியில் நல்கக் கருதி, பயர் சடை முனிவான்-நெருங்கிய — சடையையுடைய பார்ப்பாரது சொல்லுதற்கு அரிய புகழ் நிறைந்த குற்றமற்ற தவத்திறத்தையுடைய பகவன் என்னும் பெரிய முனிவன், செய்தவ.., மறையொடு—செய்த தவத்தின் பயனால் குற்றம் நீங்கும்படியாகப் பிறந்து, மாட்சிமைப் பட்ட கல்ல அருட்கொடையைக் கைக்கொண்ட காரணத்தால் தெய்வப் புலமைத் திருவள்ளுவர்' என்னும் ஒப்பில்லாத பெயரை மேற் கொண்டு, அகன்ற உலகம் உய்யும்படியாகத் துன்பத்தை நீக்கி, அறம், பொருள், இன்பம், வீடு என்றும் நான்கு பொருள்களையும் அளிக்கும் பொருத்தம் உடையதாகப் பிழையாது (இயற்றி) அருளிய அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுதிகளும் பொருந்திய திருக்குறள் என்னும் தெய்வத்தன்மை வாய்ந்த பெரிய வேதத்தோடு, தருமர்... உரையினை - தருமர் மு.தலிய சான்றோர் (பதின்மர்) இயற்றிய மாறுபாடு இல்லாத பெரிய உரைகளுள் சிறந்து நிலைத்து, செய்யுளிற் பொருந்திய புகழையுடைய பரிமேலழகர் மனமுவந்து இயற்றிய வளம் சிதைந்த உரையை, தேர்ச்சியின்... தருகென- நூலாராய்ச்சியல் மிகுந்தோர் மனம் நன்கு மகிழக் கையெழுத்து ஏடுகளால் புகுந்த பிழைகளை நீக்கி, அழகு பொருந்திய அச்சில் (ஏற்றித்) தருவாய் என்று சொல்ல, பஃறலை... வணங்கலரேறு—பல தலைகளையுடைய ஆதி சேடன் என்னும் பாம்பு சுமந்த பல மலைகளையுடைய பூமியில் மடிந்த பிடரி மயிரைக் கொண்ட குதிரையை யுடைய

93