பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது. பொருள். ஒருவன் அறம் கூறான் அல்ல செய்யினும்— ஒருவன் அறங்களைக் கூறுதவனாய் மறங்களைச் செய்யினும், புறங்கூறான் என் றல் இனிது -புதங்கூறான் என்று சொல்லப்படுதல் (கேட்டோர்க்கு) இன்பம் பயக்கும். கருத்து. புறங்கூறல் மரஞ் செய்தலினும் தீபி. ங. அறனழீஇ யல்லவை செய்தவிற் றீதே புறனழீஇப் பொய்த்து நகை. 161. பொருள். புதன் அழீ பொய்த்து ஈசை- (ஒருவனது) புறத் தில் (அவளை) இழித்துக் கூறி (அவன் முன்னே உயர்த்துக் கூறிப்) பொய்த்து நகையாடல், அதன் அழீ அல்லவை செய்தலின் தீதே அதங்களை அழித்து மதங்களைச் செய்தலினும் தீதே. அகலம். ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. அழித்துக் கூறலை அழித்தம் என்றார். ஒருவனை இழித்துக் கூறுதல் அவணது பெருமையை அறித்தஸால், இழித்தலை அழித்தல் என்றார். அன பெடைகள் இரண்டும் இன்னிசைக்கண் வந்தன. கருத்து. இதுவும் அது. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாத லறங்கூறு மரக்கந் தரும். 162. பொருள். புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின்- (ஒருவ னது) புறத்தே (அவளைப்) பழித்துக் கூறியும் (அவன் என்னே ) புகழ்ந்து கூறியும் உயிர் வாழ்தலினும், சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - இறத்தல் அற நூல் (புறன் கூறமைக்குச்) சொல்லும் ஈன்மை (எல்லாம்) தரும்.

204'

204