பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். மருக்கு ஓடி, தீ லினை செய்வான் என்னின்-(ஒரு வள் அத செறியை விட்டுப்) பக்கத்தில் ஓடித் தீய விளைகளைச் செய் வான் என்றால், அரு கேடன் என்பது அறிகட நீக்குதற்கு அரிய கேட்டை யுடையவன் என்று அறியக்கடவன். அகலம். முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘செய்யா வெனின்'. அது பிழைபட்ட பாடம், ' அருங் கேடன்' என்பதற்கு 'நீக்குதற் கரிய சேட்டை யுடையனன்' என்பதே பொருளாகலானும், ஒன்றைச் செய்தற்கே ஓடுதல் இயற்கை யாகலானும். கருத்து. தீவினை செய்பவன் நீங்காத கேட்டை அடைவன். யகூ-ம் அதி:- ஒப்புர வறிதல். அஃதாவது, தாடொப்பன செய்தல். 'அறிதல்' என்பது ஈண்டுச் செய்தற் பொருட்டு. க. கைம்மாது வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு. பொருள். கடப்பாடு கைமாறு வேண்டா—ஒப்புரவுகள் கைம் மாற்றை விரும்பா; மாரிமாட்டு உலகு என் ஆற்றும்-மழைக்கு உல கம் யாது கைம்மாற்றினைச் செய்யும்? (ஒன்றும் செய்ய இயலாது.) அகலம். கொல், ஓ என்பன அசைகள். கைம்மாறு- பிரதி யுபகாரம், கடப்பாடு என்றமையாலும், மழையை உவமானமாகக் கூறினமையா லும், ஒப்புர வென்பது கைம்மாறு கருதாத உதவி என்று கொள்க, ஒப்புரவு தவிர்க்கப்படுவ தன்று என்பதை உணர்த்த வேண்டி, அதனைக் கடப்பாடு என்றார். ஒப்புரவு செய்வாரது வேண் டாமையை ஒப்புரவின்மேல் எற்றிக் கூறினார். கருத்து. ஒப்புரவு கைம்மாறு கருதாத உதவி. 212

181.

212