பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவள்ளுவர் திருக்குறள்

விரும்பார். ஆகலின், இதுவே வியப்பைச் செய்வதாம். வ.உ.சி. உரை:- அதுபோல, இதுவும் வியப்பைச் செய்வ தன்று.

தாளார் மலரெனலால், தாமரை மலரெனப்பட்டது. வியப்பைச் செய்வதை வியப் பென்றார், 'மூழ்குதல்' இங்கே கருத்து முழுதும் அழுந்தி நிற்றன்மே னின்றது. 'மொழி' ஆகு பெயர். 'ஓகாரம்' எதிர்மறை. விரும்புதலாகிய காரணத்தை ஆய்பவோ வெனக் காரியமாக உபசரித்தார். அது வியப்பன் றென்றமையால், இது வியப்பென்ற தாயிற்று. உயர்வான பொருள் பெற்றோர்க்கு அதின் இழிவான பொருளையும் பெற விரும்புதல் இயல்பா யிருக்க, குளிர்ச்சி, இன்சுவை, நறுமணம் முதலிய குணங்களாலே சிறந்த ஒரு தாமரைக் குளத்து நீரைப் பெற்றோர்க்கு அதனாற்றானே அமைதி பெற்று வேறு தண்ணீரைப் பெற விரும்பாமை வியப்பைச் செய்வதாயிற்று; ஆயினும், இதுகாறும் ஒரு நூலைக் கற்றோர்க்கு வேறு நூலைக் கற்க விரும்புத்லன்றி விரும்பாமையில்லாதிருக்க, இப்போது உள தாகலின், இதுவே பெரு வியப்பைச் செய்வ தென்ற தாயிற்று. இதனால் இந் நூலகத்து எந் நூற் பொருளும் அடங்கி யிருக்கின்றமை குறிப்பிக்கப்பட்டது. பல நூல்களையுங் கற்க விரும்புவோர்க்கு இது வொன்றே அமைதல் சொல்லிய படி. (உ௰)

அரிசிற் கிழார்.

பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறுஞ் சேரச்- சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்
வல்லாரார் வள்ளுவரல் லால்.

இ-ள். பரந்த பொருளெல்லாம் பார் அறிய வேறு தெரிந்து-வேதத்திலே ஒன்றோ டொன்று மயங்கி நின்ற நால் வகைப் பொருள்களையும் இப் பூமியி லுள்ளோர் அறிதற் பொருட்டு வேறாகப் பிரித்து,

20