பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறப்புப் பாயிரம்.

இ-ள். சாற்றிய பல் கலையுந் தப்பா அரு மறையும் போற்றி உரைத்த பொரு ளெல்லாம் தோற்ற - அறிவுடையோராற் சொல்லப்பட்ட பல நூல்களாலும் தப்பாத அரிய வேதத்தினாலும் காப்பாற்றி வைத்திருந்து உலகத்தார்க்குச் சொல்லப்பட்ட விடயங்களெல்லாம் தன்னிடத்தே காட்டும்படி, முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப் பாவலரினும் இல் - திருக்குறளைச் சொல்லிய திருவள்ளுவரை யொப்பவர் எவ்வகைப்பட்ட பாவலருள்ளும் இல்லை.

தம்மாலே சொல்லப்பட்டவற்றில் வழு வுறாமையால் தப்பாவென்றும், பொரு ளுணர்தற்கேயன்றி ஓதுதற்கும் எளிதன் றாகலின் அருவென்றும் விசேடணஞ் செய்யப்பட்டது.'எப்பாவலரினு மில்' இதற்கு முன்னுரைக்கப் பட்டபடியே கொள்க. முதற் பாவலர் முதன்மையையுடைய பாவலர்; நால் வகைப் பாக்களில் வெண்பாக்களும் அவற்றுள்ளும் குறள் வெண்பாவும் தலைமை பெற்று நிற்றலின், அக் குறள் வெண்பாவால் நூல் செய்த வல்லமை யுடையரென்று மாம்.. புலமையிலே நாயனாருக்கு ஒப்பின்மை சொல்லியபடி. (௰௮)

கீரந்தையார்.

தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
முப்பாலி னாற்பான் மொழிந்தவ- ரெப்பாலும்
வைவைத்த கூர்வேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள்ளுவர்.

இ-ள். எப்பாலும் வை வைத்த கூர் வேல் வழுதி மனம் மகிழ - எவ்விடத்திலும் கூர்மை வைத்த சிறப்புப் பொருந்திய வேலையுடைய பாண்டியராசன் மனம் மகிழ, தப்பா முதற் பாவால் தாம் மாண்ட பாடலினால் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - சொல்லப்பட்ட பொருள் வழுவாமல் முதன்மையுடைய பாவாகிய குறள்

25

4