பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிறப்புப் பாயிரம்.


மதுரைப் பாலாசிரியனார்.

வெள்ளி வியாழம் விளங்கிரவி வெண்டிங்கள்
பொள்ளென நீக்கும் புறவிருளைத் — தெள்ளிய
வள்ளுவ ரின் வெண்பா வகிலத்தோ
ருள்ளிரு ணீக்கு மொளி.

இ—ள், வெள்ளி வியாழம் விளங்கு இரவி வெண் டிங்கள் புற விருளைப் பொள்ளென நீக்கும்—சுக்கிரன் கரகுரு சூரியன் சந்திரன் என்பன புறத்திருளை விரைவிலே நீக்கும் ஒளிகளாம்; தெள்லிய வள்ளுவர் இன் குறள் வெண்பா அகிலத்தோர் உன் ளிருள் நீக்கும் ஒளி—முற்றுணர்ந்த திருவள்ளுவ நாயனாரது இனிய குறள் வெண்பா உலகத்தோரது உள்ளிருளை நீக்கும் ஒளியாம்.

இங்ஙனங் கூறவே, புறத் திருளுக்கு அவை பல வுள; அகத் திருளுக்கு இஃ தொன்றே உளதென்ற தாயிற்று. அவற்றுள் ஒன்றாலும் நீக்கப்படாத அகத் திருளை நீக்க வல்ல தாகலின், இதற்கு எவ்வாற்றனும் ஒப்ப தொன் றின் றென்றபடி, (௫௰௨)

ஆலங்குடி வங்கனார்.

வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குந்
தெள்ளமுதின் றீஞ்சுவையு மொவ்வாதா-றெள்ளமுத
முண்டறிவார் தேவ ருலகடைய வுண்ணுமால்
வண்டமிழின் முப்பான் மகிழ்ந்து.

ஓ—ன்: வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய் மடுக்கும் தெள் ளமுதின் தீஞ் சுவையும் ஓவ்வாது—திருவள்ளுவரது பாட்டினது தீஞ் சுவையைச் சொல்லுமிடத்து, உண்ணப் படுகின்ற

53