பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும் தொடல்ங்குறகும் பெயர்கிலைக் கிளவியும் வேற்றுமைாயி ருபின் னிலையும் மெல்லெழுத்து மிகுத லாவயி னான. இஃது, இவ்வீற்றுட் சில உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் வேற்றுமைக்கண் உருபுபுணர்ச்சி முடிபெய்தி முடிந்தவாறே பொருட்புணர்ச்சிக்கண் முடிதலுமுடைய வென்பது உணர்த்துதல் நுதலிற்று. இள்:- படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர் நிலைக்கிளவியும் - எல்லாரும் என்னும் படர்க்கைப்பெயரும் எல்லீரும் என்னும் முன் னிலைப்பெயரும் கிளைத்தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகிமுடியும் தாம் நாம் யாம் என்னும் பெயரும், வேற்றுமையாயின் உருபு இயல் நிலையும் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் ணாயின் உருபுபுணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின்கண்ணே நின்று, சாரியைபெறுவன ஈறுகெட்டு இடையும் ஈறும் சாரியைபெற்றும், நெடுமுதல் குறுகுவன நெறிமுதல் குறுகியும் முடியும். அ வயின் மெல்லெழுத்து மிகுதல் ஆன - அந் நெடுமுதல் குறுகுமொழிக்கண் மெல்லெழுத்து மிகும். உ-ம். எல்லார்தங்கையும், எல்லீர் நுங்கையும்;-செவியும், தலையும், புறமும் எனவும்: தங்கை, நங்கை, எங்கை:- செவி, தலை, புறம், எனவும் ஒட்டுக. 'வேற்றுமையாயின்' என்றதனால், படர்க்கைப்பெயர்க்கும் முன்னிலைப்பெயர்க்கும் இயல்புகணத் துக்கண் ஞகரமும் நகரமும் வந்தவழி தம்முச்சாரியையும் நும்முச்சாரியை யும் ஈறு கெடுதல் கொள்க. 'ஆவயினான' என்றதனால், படர்க்கைப்பெயர்க்கும் முன்னிலைப்பெயர்க்கும் ஞகர மும் நகரமும் வந்துழி அவை மிகுதலும், தொடக்கம் குறுகும் பெயர்க்கு ஞகரமும் நகரமும் வந்துழி மகரங்கெட்டு அவை மிகுதலும் கொள்க. எல்லார் தஞ்ஞாணும், எல்லீர்நுஞ்ஞாணும்; - நூலும் எனவும்: தஞ்ஞாண், கஞ்ஞாண், எஞ்ஞாண்; - நூல் எனவும் வரும். இன்னும் 'ஆவயினான' என்றதனால், படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் சாரியைபெறாது இறுதி உம்முப்பெறுதலும் கொள்க. எல்லார்கையும், எல்லீர்கையும்; செவியும்,தலையும், புறமும் எனவரும்.இன்னும் அதனானே, உருபீற்றுச் செய்கை யெல் லாம் கொள்க. தமகாணம் எனவரும். [இஃது அகரவுருப்பெற்று முடிந்தவாறு காண்க.] அல்லது கிளப்பி னியற்கை யாகும். இது, மேலனவற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்- அல்லது கிளப்பின் இயற்கை ஆகும் - மேற்கூறிய பட படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் தொடக்கம் குறுகும் பெயர்நிலைக்கிளவியும் அவ்வழியைச் சொல் லுமிடத்து இயல்பாய் முடியும். ஈண்டு இயல்பென்பது சாரியை பெறாமை நோக்கி, இவற்றின் ஈறு திரிதல் '"அல்வழியெல்லாம் (சூத்திரம்- யகூ) என்றதனுள் "எல்லாம்" என்னும் இலேசினாற் கொள்க. உ-ம். எல்லாருங் குறியர்:- சிறியர், தீயர், பெரியர் எனவும்: எல்லீருங்குறியீர்;- சிறியீர், தீயீர், பெரியீர் எனவும்: தாம் குறியர்:-சிறியர், தீயர், பெரியர் எனவும்: நாங் குறியம்;-சிறியம், தீயம், பெரியம் எனவும்: யாங்குறியேம்; சிறியேம், தீயேம், பெரியேம் எனவும் வரும்.