பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ளருச தொல்காப்பியம் - இளம்பூரணம் ஆறன் மருங்கின் ஈறு மெய்யொழியக் கெடும் என்னாது குற்றியலுகரம் என்றோ தினமையான், நெடுமுதல் குறுகாதே நின்று ஆறாயிரம் என்றும் ஆம். இன்னும் அதனானே "ஆறாகுவதே" [சொல்லதிகாரம் - வேற்றுமையியல் சூத்திரம் கஅ.) என்றாற் போலப் பொருட்பெயர்க்கண் வருமுடிபும் கொள்க. மேல் மாட்டேற்றானே எண்ணாயிரம் என முடிந்தது. சஎய ஒன்பா னிறுதி யுருபுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. இதுவும் அது. () இ-ள்:- ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மரபு இன்பெறல் வேண் டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதிக் குற்றியலுகரம் தன் வடிவு நிலை திரிந்து கெடாது சாரியையாகிய மரபினையுடைய இன்பெற்று முடிதல் வேண்டும். உ-ம்:- ஒன்பதினாயிரம் எனவரும். உருபு என்றும்,நிலை என்றும், சாரியை மரபு என்றும் கூறிய மிகுதியான், ஆயிர மல்லாத பிற எண்ணின்கண்ணும் பொருட்பெயரிடத்தும்,இன்னும் உகரமும் வல்லே ழுத்தும் பெற்று முடியும் முடிபும் கொள்க. ஒன்பதிற்றுக்கோடி, ஒன்பதிற்றொன்று, ஒன்பதிற்றுத்தடக்கை, ஒன்பதிற்றெ ழுத்து என வரும். இன்னும் அவ்விலேசானே, மேல் எண்ணாபிரம் என்ற வழி ஒற்றிரட்டுக் கொள்க. [மம் ஈத்தசை.) சஎக. நூறா யிரமுன் வரூஉங் காலை நூற னியற்கை முதனிலைக் கிளவி. (Jr) இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறு என்னும் அடையடுத்து ஆயிரம் என்பது முடியுமாறு கூறுகின்றது. இ-ள்:- நூறாயிரம் முன் வரு காலை முதல் நிலைக்கிளவி நூறு என் இயற்கை நூறாயிரம் என்னும் அடையடுத்த மொழி (ஒன்று முதல் ஒன்பான்கள்) முன்வருங் காலத்து முதனிலைக்கிளவியாகிய ஒன்று என்னும் எண் (மேல் ஒன்று முதல் ஒன்பான் களோடு முடிந்த) நூறு என்னும் சொல் அவ்வொன்றனோடு முடிந்த விகார இயற்கை எய்தி முடியும். வழிநிலைக்கிளவியாகிய இரண்டு முதல் எண்கள் விகாரம் எய்தியும் எய்தாததும் இயல்பாயும் முடியும். வழிநிலைக்கிளவியாகிய இரண்டு முதல் எண்கள் விகாரம் எய்தியும் எய்தாதும் இயல்பாயும் முடியும். உம்:- ஒரு நூறாயிரம் எனவரும். இரு நூறாயிரம், இரண்டு நூறாயிரம்; முந் நூறாயிரம், மூன்று நூறாயிரம்; நா னூறாயிரம்; நான்கு நூறாயிரம்; ஐந் நூறாயிரம்,ஐந்து தூறாயிரம்; அறுநூறாயிரம், ஆறு நூறாயிரம்; எண் ணூறாரேம், எட்டு நூறாயிரம், ஒன் யது தூறாயிரம் எனவரும். உரையிற் கோடல் என்பதனால், தொள்ளயிரம் என்ற முடிபினோடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க. 'முன்' என்பதனான் இன்சாரியைபெற்று ஒன்பதினூறாயிரம் என்றும் ஆம். 'நிலை' என்றதனான், மூன்றும் ஆறும் இயல்பாய் முடியும் முடிபின்கண் நெடு முதல் குறுகாமை கண்டு கொள்க. இன்னும் அதனானே நானூறாயிரம் என்புழி வருமொழி நகரக்கேடு கொள்க. (@)