பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ச தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள்:- வேற்றுமை பெயர் வழிய புணர் நிலை-வேற்றுமை பெயர்களின் பின் னிடத்தன அவற்றோடு புணரும் நிலைமைக்கண். சாத்தனை, சாத்தனொடு எனவரும். மேல் "உருபுநிலை திரியா தீறுபெயர்க் காகும்" [வேற்றுமையியல்-அ] என் கின்றாரன்றோ வெனின், பெயரொடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்கலின், வினைவழியும் உருபு வருமென் பதுபட நின்றதாகலின் ஈண்டு இது கூறப்பட்டது. [வேற்றுமை - வேற்றுமையுருபு கள். ஏகாரம் ஈற்றசை.) ளகஅ. உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. (கச) இது, வேற்றுமையொடு புணரும் பெயர்கட்குப் பெயரும், முறையும், தொகை யும் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- உயர்திணைப்பெயரே அஃறிணைப்பெயர் என்று அ இரண்டு என்ப- உயர்திணைப்பெயரும் அஃறிணைப்பெயருமாகிய அவ்விரண்டு மென்று சொல்லுப, பெயர் நிலை சுட்டு பெயராகிய நிலைமையது கருத்தினை. பெயர். ஆடூஉ, மகடூஉ என்பன உயர்திணைப்பெயர். ஒன்று பல என்பன அஃறிணைப் மற்று விரவுப்பெயர் கூறா ராயது என்னை யெனின், மற்றது சாத்தன் வந்தான் வந்தது எனப் புணர்ச்சிக்கண் பெரும்பான்மையும் ஒருதிணைப்பாற் படுதலின், அவ் விரண்டாக அடக்கிக் கூறினா ரென்பது. [எ,என்று என்பன எண்ணிடைச்சொல் இரண்டாம் எகாரம் ஈற்றசை.) (கரு) ளக க . அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. இது, சாரியை வரும் இடம் கூறுதல் நுதலிற்று. இ-ள்:- அவற்றுவழிமருங்கின் சாரியை வரும்-அப்பெயர்களின் பின்னாகிய இடத்தின்கண்ணே சாரியை வரும். ஆடூஉவின் கை, பலவற்றுக் கோடு எனவரும். ('அவற்றுள்வழி' எனவும் பாடம்.] ளஉடு. அவை தாம் இன்னே வற்றே யத்தே யம்மே ஒன்னே யானே யக்கே யிக்கே அன்னென் கிளவி யுளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே. இது, சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் லிற்று. நுத இ-ள்:- அவைதாம் - மேற் சாரியை யென்னப்பட்டவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே ஒன்னே ஆனே அக்கே இக்கே அன் என் கிளவி உளப்பட பிற வும் - இன்னும் வற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன் என் னும் சொல்லுமாகிய அவ்வொன்பதும் உளப்படப் பிறவும், அன்ன என்ப சாரியை மொழி - அச்சாரியையாம் தன்மைய என்று சொல்லுவர் சாரியையாகிய மொழிகளை.