பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் சஎ பூவினொடு விரிந்த கூந்தலெனவும், பூவொடுவிரிந்த கூந்தலெனவும், உண்மையும் இன்மையும் ஒடுவயின் ஒத்தவாறு, 'இயற்கை' என்றதனான் ஒடுவுருபின்கண் சாரியை பெறுதலும் பெறாமையும் ஒழிய, ஒரோவழிப் பெற்றேவருமென்பது கொள்க. பலவற்றோடு எனவரும். (ஙய) ளஙு சு. அத்தே வற்றே யாயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுத றெற்றென் றற்றே அலற்றுமுன் வருடம் வல்லெழுத்து மிகுமே. இஃது, அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழியினும் வருஞ் செய்கை கூறுதல் நுதலிற்று. இ-ள் :-அத்தே வற்றே அ இரு மொழிமேல் ஒற்று மெய்கெடுதல் தெற்றென் றற்று - அத்தும் வற்றுமாகிய அவ்விரு மொழிமேல்நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதல் தெளியப்பட்டது அவற்றுமுன் வரும் வல்லெழுத்து மிகும்-அங்கிருசாசியை முன் னும் வரும் வல்வெழுத்து மிகும். (முக்திய ஏகாரம் இரண்டும் எண்ணிடைச்சொல். பிந்திய ஏகாரம் இரண்டும் ஈற்றசை ) உ-ம். கலத்துக்குறை, அவற்றுக்கோடு எனவரும். கலன் என னகாரமாக நிறுத்திக்கெடுக்கவே, 'ஒன்றின முடித்தல்' என்பதனால், புள்ளியீறல்வழி விகார வகையான் நின்றனவும் அவற்றின் மிசையொற்றென்று கெடுக்கப்படு மெனக்கொள்க. அவற்றுக்கோடு எனவரும். இஃது ஐகார ஈறு. ஈண்டு வல்லெழுத்து மிகுமென்றது ஈற்றுவவ்வெழுத்தின்றித் திரிந் அமுடியும் னகரமும் ணகரமும் லகரமும் ளகரமும் என இவற்றை நோக்கி யெனவுணர்க. அத்து முற்கூறிய முறையன்றிய கூற்றினான், அத்தின்மிசை யொற்றுக் கெடா ஆகிற்கவும் பெறும். விண்ணத்துக்கொட்கும், வெயிலத்துச்சென்றன், இருளத்துக் கொண்டான் எனவரும். 'மெய்' என்றதனால், அத்தின் அகரம், பிறவுயிரின்முன்னும் கெடுதல்கொள்சு. அண்ணாத்தேரி எனவரும்- 'தெற்று' என்றதனால், அத்தின் அகரம் கெடாது நிற்றலும் கொள்க. விளவத் துக்கண் எனவரும். ளஙரு. காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. (ஙக) இஃது, எழுத்துச்சாரியைகட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் நுதலிற்து. இ-ள் :காரமும் கரமும் கானொடு சிவணி-சாரமும் காமும் கொஹெறு பொரு திநேர தோன்றும் எழுத்தின் சாரியை எல்லா ஆசிரியசானும் உடன்படத் தோன் றும் எழுத்துச்சாரியை யாதற்கு. இவை. 'நேரத்தோன்றும்' என்றதனான், நேரத்தோன்றாதன ஆனம், ஒனம், என (2)