பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அ ம லா தி த் ய ன் (அங்கம்.1. تشم னளே! கற்புடைய ஸ்கிரீயின் மனம் தேவர்கள் வந்திடினும் எப்படிக் கலக்கப்படாதோ,அவ்வண்ணமே விபசாரிவேனில் நாதனுக்கே வாழ்க்கைப்பட்டு, பரமாம் பஞ்சனேயிலும், பா ழுக்கிடங் கொடுப்பாள் பொறு, விடிவதுபோலும் வாசனை வருகிறது -விரைவில் கூறி முடிக்கின்றேன் நான். நந்த வனத்தில் நான், என் வழக்கப்படி மத்தியான காலத்தில் கவலேயின்றி கித்திரை செய்யும்பொழுது, உன் சிற்றப்பன் ஒருவரு மறியாதபடி வந்து, வெவ்விய விஷத்தை ஒரு கிண் ணத்திற் கொணர்ந்து என் செவியின் புரைக்குள் வார்க்க, அப்பாழும் விஷமானது பாதரசத்தைப்போல் என் உடல் முழுதும் பரவி என் தேகத்திலிருந்த சுத்த இரத்தத்தை யெல்லாம் கூடினப்பொழுதில் புரையிட்ட பாலைப்போல் முறித்துக் கெடுத்து, என்னழகிய மேனியெல்லாம் குஷ்டம் போன்ற தேமல் படையொன்றைப் பாவச்செய்து அழித் தது . இவ்விதம் என் தம்பியின் கரத்தால், உறங்கும்பொழு து, என் ஆவியையும் என் அரசையும், என் அரசியையும், அங்கொடியில் இழந்தேன். கானிழைத்த பாபங்களெல்லாம் பரிஹரித்துப் போகும்வழிக்கு, புண்ணியகருமங்கள்செய்து முடிக்கு முன்னம், பரலோக மனுப்பப்பட்டேன் பாவியால். அமலாகித்யா பாதகம் பாதகம் அகோர பாதகம் ! உன் னிடம் மானிடப் பிரகிர்தி அணுவளவேனு மிருக்குமாயின், இதனைப் பொறுத்திராதே சிறப்புற்ற குர்ஜாதேயத்து இராஜ சயனத்தில் உன் சிற்றப்பனும் விபசாரன் விற்றிருக்க விடாதே - எவ்விதத்தில் இவ்வேலையை முடிக்க முயன்ற போதிலும் உன் மனத்தை மழுங்கவிடாதே அன்றியும் உன் அன்னக்குக் கேடு சூழக்கருதாதே! ஈசனிருக்கின்ரு o அவளைத் தண்டிக்க, அன்றியும் அவளது குற்றமாம் முட் களே அவளது நெஞ்சத்திற் குத்தி வருத்தும். நான் போய் வருகின்றேன் விரைவில் மின்மினியின் காந்தி குறைவ தினுல் அருணுேதய காலம் ஆய்விட்டதெனத் தெரிகின்றது. வருகின்றேன் ! வருகின்றேன் ! வருகின்றேன். மறவாதே என்ன! - (மசைகின்றது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/38&oldid=725205" இலிருந்து மீள்விக்கப்பட்டது