பக்கம்:As We Sow-So We Reap.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 6}l. முற்பகற் செய்யின் (அங்கம் - 2 குச் செய்த வாக்குத்தத்தத்தினின்றும் அவனே விட்டு விடும்படி, நீ அப்பொழுது அதற்கேதோ உடன்பட்டவள் போல் பேசி, முடிவில், எனக்கொன்று மில்லை, நீர் உமது பிதாவுக்குச் செய்திருக்கும் பிரமாணம் எப்படிப்போவது, அதற்கே வருத்தப்படுகிறேன், என்று சொல். உடனே ஜெயகேதுவைப்போல் வேடம்பூண்டு இங்கு மறைந்திருக் கும் நான் வெளிப்பட்டு அவனை பயமுறுத்துவேன். நீ என்னைத் திரும்பியும் பார்க்கவேண்டாம். நான் இன்னு னென்று எவ்விதத்திலும் வெளிப்படுத்தாதே. பிறகு கிமிஷத்தில் அவன் நமது வழிக்கு வந்துவிடுவான். பிறகு, உடனே உன்னத் தனது குலதெய்வத்தின் கோயிலுக் கழைத்துச்சென்று மணமாலே சூட்டச்சொல்.-ஒருமுறை மணந்தபின் உன்னே விட்டுப் பிரியான்-பிறகு நடக்க வேண்டியதைப் பார்த்துக்கொள்ளுவோம். அண்ணு இது நியாயமா? ஐயோ! இது கியாயமா?உனக்கு மிகவும் கியாயம் தெரியும் பேசாதே என் பெண்ணென்பது உண்மையானுல் என் சொற்படி நடப் பாய். இதோ மதனன் வரும் நேரமாயது, ஜாக்கிரதை, இனி யோசித்துப் பயனில்லை. என் சொற்படி நடக்க வேண்டியதுதான். - (விரைந்து போகிருன்.) ஐயோ இதென்ன சங்கடமாய் முடிந்ததே! நான் இத் தீய தொழிலுக் குடன்படவோ இல்லாவிட்டால், தங் தைக்குக் கோபம் வரும். அவருக்குக் கோபம் வந்தால், இன்னது செய்வார் இன்னது செய்யமாட்டார் என்றில்லை. ஐயோ! நான் என் செய்வேன் : மதனமோஹனன் வருகிருன். வாரும்--ராஜகுமாரா வனஜா,-கான் எதைப்பற்றி உன்னிடம் பேச வந்திருக் கிறேன் தெரியுமா உனக்கு? என்ன விசேஷம் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/37&oldid=725615" இலிருந்து மீள்விக்கப்பட்டது