பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. பிராம்மணனும்-சூத்திரனும் (smuth-4 சரிதான் அவர் வேலைதான் இதெல்லாம் ! அந்தக்கடி தங்களில் என்ன எழுதி இருந்தது என்று கேட்கலாமா கான்-மாமா ? பெரியப்பா, உங்களுக்குத் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை; அண்ணுசாமி முதலியார் அச்சிட்ட மணப்பத்திரி கையைப் பார்த்து ஒருவேளை என்மீது சந்தேகப்பட வேண்டாம், இந்தக்கலியாணம் இருபதாம் தேதி கடக்கப் போகிறதில்லை- எது எப்படியாயினும் நான் என் வாக்கி னின்றும் தவறமாட்டேன்-அப்படி எதாவது கிர்ப்பக் திக்கப்பட்டால் என் உயிரை விட்டாலும் விடுவேனே யொழிய-உம்மை யன்றி வேருெரு புருஷனைக் கலியா ணம் செய்துகொள்ளேன்-என்று எழுதி யிருந்தேன். ஐயோ! என்ன தப்பிதம் செய்தேன் ! அப்பத்திரிகையை கம்பி-பயித்தியம் பிடித்தவனுய்-நான் சத்யநாராயண ஐயர் பெண்ணைக்கலியாணம் செய்துகொள்ள இசைக் தேனே ! எனக்குக் கொடுத்த பிரமாணத்தினை மறந்து 1 ஆம் ஆம்! தவறு! தவறு! அந்த உண்மையையும் நீங்கள் எல்லாம் அறியவேண்டியதுதான். என் தாயார் இன்னும் பத்துநாளைக்கு மேல் தாங்கமாட்டார்கள் என்று வயித் தியர் கைவிட்டபோது-அவர்கள் இறப்பதன் முன் எனக்குக் கலியாணம் செய்து பார்க்கவேண்டு மென்று தன் கடைசிவேண்டு கோளாக என்னை வேண்டியபோதுஎன் கற்பகத்தின் மனதைத் திர்ப்தி செய்ய முடியாத பாபியானலும், எ ன் த யார் வேண்டுகோளையாவது முடித்து-கலியாணமானவுடன்-அவர்கள் இற க்கும் தினம்-கானும் இறக்கவேண்டுமென்ற தீர்மானித்தேன்இது சத்தியம் ! என் வார்த்தையை-நீங்கள் எல்லோரும் நம்பும்படி வேண்டுகிறேன் (முகத்தைத்திருப்பிக் கொண்டு துக்கிக் கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/110&oldid=725692" இலிருந்து மீள்விக்கப்பட்டது