பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சுவர் இருபுறமும் 7 உன்னே யார் பார்த்துக் கொள்ளப் போகிருர்கள்? நீ எங்கே போவாய் ! (நடராஜன் படுக்கையின் மீது சாய்ந்து விழுகிருன், சாவித்திரி தன் முகத்தை மூடி தேம்பி அழுகிருள்.) (இடது புறம்) ஏ வேதாந்தி-இதோ பார்வேதாந்தமும் சித்தாந்தமும் அதெல்லாம் எனக்கென்ன தெரியும்? எனக்குத் தெரிந்ததெல்லாம் நாம் ஸ்வாமியை நம்பி யிருக்கவேண்டும், நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும், நாம் தப்பு செய்யக்கூடாது, என்பது தான்(ஒரு புஷ்பம் வைக்கும் படிக்கத்தைக் காட்டி) இதை நான் எங்கே வைப்பது ? அந்தச் சின்ன மேஜையின் பேரில் வை அதை-அதில் தண்ணிர் இருக்கிறதா ? இல்லை-இதைத் தண்ணீரால் கிரம்பச் செய்யவேண்டுமா? சந்தேகமென்ன ! எல்லாம் வற்றிப்போயிருக்கிறது இன்றைக்கு-உன்னிடம் உன் பை இருக்கிறதா ? ஏன் கேட்கிருய் ? என்ன, குடிக்கவேண்டுமோ நீ இப் பொழுது அதுவும் இன்றைக்கு ? எனக்கு தாகமா யிருக்கிறது. கொஞ்சம் வெளியே போய் ஆகந்த ஆசிரம ஹோட்டலில் ஒரு வாய் காப்பி குடித்து விட்டு திரும்பி வந்து விடுகிறேன். நீ எங்கே போவாய், என்ன குடிப்பாய், என்று எனக் குத் தெரியும், என்னிடம் ஒரு காசும் கிடையாது, அப் படி இருந்தாலும் உனக்குக் கொடுக்கமாட்டேன். நீ நல்லவளாச்சே-எனக்கு கிரம்ப தாக்மா யிருக்கிறது. எங்கே உன் பை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/13&oldid=725844" இலிருந்து மீள்விக்கப்பட்டது