பக்கம்:Chandrahari.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ச ந் தி ர ஹ ரி (அங்கம் - க் யமன் எப்படியடா மன மொப்பி கொண்டுபோனுன் ? இனி என் செய்வேனடா கண்மணி கண்மணி ! மதிசந்திரா, என்ன விசேஷம் ? என்ன சமாசாரம்? பாம் பா கடித்து இறந்தான் உன் மைந்தன்? இவன் இங்கேன் வந்தான் ? ஸ்வாமி வாருங்கள் -கான் என்ன சொல்லப் போகி றேன் ? என் கதி யிப்படி ஆயிற்றே ! நீங்கள் அந்த பிராம்மணருக்கு எங்களை அடிமையாக விற்றுப் போன பின், அந்தப் பிராம்மணன் என் மைந்தனே இளம்பிாாய முடையவன் என்றும் பாராமல் இவ் வருங் கானகத்தில் சமித்து கொண்டு வரும்படி அனுப்பினுன், இங்கே இவன் வந்து சமித்து அறுத்துக்கொண்டிருந்தபொழுது அரவம் தீண்டி மாண்டதாக அசலாத்துப் பிள்ளைகள் வந்து சொல்ல உடனே நான் என் எஜமானன் உத்தரவு பெற்று பிள்ளைகள் சொன்னவழியில் தேடி வந்து, இறந் து கிடக்கும் என் மைந்தனேக் கண்டு உயிரற்ற அவன் உடல்மீது விழுந்து என் துயரம் ஆற்ருது புலம்புகிறேன் -கண்ணே காசதேவா!-பத்துமாதம் உன்னைச் சுமங் துபெற்ற தாய் புலம்புகிருளே யென்ருவது ஒரு வார்த் தை உன் கனி வாய் திறந்து பேசமாட்டாயா? கண்மணி ! இந்த அகோரமான காட்டில் அைைதயாய் நமது அன்னை புலம்புகிருளே யென்முவது ஒரு வார்த்தை தேறுதலாகச் சொல்லடா என் கண்மணி : (ஒரு புறமாக என்ன பாசாங்கு செய்கிருள்!--மதிசந்திரா, நடந்தது நடந்து விட்டது . இனி என்ன செய்யலாம்? -இப்பொழுது என்ன செய்யப்போகிருய் ! ஐயோ! எனக்கு இன்ன செய்வதென்று தோன்றவில் லேயே நடுக் கடலில் கப்பலுடைந்த மாலுமியைப்போல் தவிக்கின்றேனே 1 ஐயோ! எங்கள் அடிமைத்தனத்தி னின்றும் விடுவிக்க என் பிராணநாதன் நாளை வந்து, என்னே எங்கே நமது மைத்தன் என்று கேட்பாாாகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/52&oldid=725943" இலிருந்து மீள்விக்கப்பட்டது