பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91


பகுதி VII
முதலாம் இணைப்புப்பட்டியலின் ஆ பகுதியில் உள்ள மாநிலங்கள்

[1][238. ★★]

பகுதி VIII
ஒன்றியத்து ஆட்சிநிலவரைகள்

239. ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளின் நிருவாகம் :

(1) நாடாளுமன்றம் சட்டத்தினால் பிறவாறு வகைசெய்தால் அல்லாமல், ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒவ்வொன்றையும், குடியரசுத்தலைவர் தாம் குறித்துரைக்கும் பதவிப்பெயருடன் அமர்த்தும் ஆளுகையர் ஒருவர் மூலமாகத் தாம் தக்கதெனக் கருதுகிறவாறு நிருவாகம் செய்வார்.

(2) IVஆம் பகுதியில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், குடியரசுத்தலைவர், ஒரு மாநிலத்தின் ஆளுநரை அந்த மாநிலத்தை ஒட்டியுள்ள ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒன்றின் ஆளுகையராக அமர்த்தலாம்; அவ்வாறு ஆளுநர் ஒருவர் அமர்த்தப்பெறுமிடத்து, அவர் தமது அமைச்சரவையைச் சாராது தனித்து அத்தகைய ஆளுகையராகத் தமது பதவிப்பணிகளை ஆற்றுவார்.

239அ. குறித்தசில ஒன்றியத்து ஆட்சிநிலவரைகளுக்கென சட்டமன்றங்களை அல்லது அமைச்சரவையை அல்லது இரண்டையும் உருவாக்குதல் :

(1) நாடாளுமன்றம் சட்டத்தினால் பாண்டிச்சேரி எனும் ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்காக அந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்படும் அமைப்பாக்கம், அதிகாரங்கள், பதவிப்பணிகள் ஆகியவற்றுடன்—

(அ)அந்த ஒன்றியத்து ஆட்சிநிலவரைக்கான சட்டமன்றமாக இயங்குவதற்கு, தேர்ந்தெடுக்கப்பட்டதாக அல்லது ஒரு பகுதி நியமனம் செய்யப்பட்டதாகவும், ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் உள்ள ஒரு குழுமத்தை, அல்லது
(ஆ) ஓர் அமைச்சரவையை

அல்லது இரண்டையும் உருவாக்கலாம்.

(2). (1) ஆம் கூறில் குறிப்பிடப்பட்ட சட்டம் ஒன்றில், இந்த அரசமைப்பைத் திருத்துகிற அல்லது திருத்தும் விளைவை ஏற்படுத்துகிற வகையம் எதுவும் அதில் அடங்கியிருந்தபோதிலும், அந்தச் சட்டம் 368ஆம் உறுப்பைப் பொறுத்தவரை, இந்த அரசமைப்பின் திருத்தம் எனக் கொள்ளப்படுதல் ஆகாது.

[2][239அஅ. தில்லியை பொறுத்த சிறப்பு ஏற்பாடுகள் :

(1). 1991ஆம் ஆண்டு அரசமைப்பு (அறுபத்து ஒன்பதாம் திருத்தச்) சட்டத்தின் தொடக்கத்தேதியிலிருந்து தில்லி எனும் ஒன்றியத்து ஆட்சிநிலவரையானது, தில்லி தேசிய தலைநகர ஆட்சிநிலவரை என வழங்கப்பெறும் (இதன் பின்பு இந்தப் பகுதியில் தேசிய தலைநகர ஆட்சிநிலவரை என்று குறிப்பிடப்படும்) மற்றும் 239 ஆம் உறுப்பின்படி அமர்த்தப்பெறும் அதன் ஆளுகையர், துணை நிலை ஆளுநர் எனும் பதவிப்பெயரில் குறிப்பிடப்படுவார்.


  1. 1956 ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் 29ஆம் பிரிவினாலும் இணைப்புப் பட்டியலினாலும் நீக்கறவு செய்யப்பட்டது.
  2. 1991 ஆம் ஆண்டு அரசமைப்பு (அறுபத்து ஒன்பதாம் திருத்தம்) சட்டத்தின் 2ஆம் பிரிவினால் (1-2-1992 முதல் செல்திறம் பெறுமாறு) புகுத்தப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/116&oldid=1468849" இலிருந்து மீள்விக்கப்பட்டது