பக்கம்:Constitution of India in Tamil 2008.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96


(3) இந்த அரசமைப்பின் வகையங்களுக்கும், இந்த அரசமைப்பினாலோ அதன் வழியாலோ உரிய சட்டமன்றத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு அச்சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தின் வகையங்களுக்கும் உட்பட்டு, ஒன்றியத்து ஆட்சிநிலவரை ஒன்றன் தொடர்பாக, 1956ஆம் ஆண்டு அரசமைப்பு (ஏழாம் திருத்தம்) சட்டத்தின் தொடக்கநிலையை ஒட்டிமுன்பு அதிகாரம் செலுத்திவந்த உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றும், அத்தகைய தொடக்கநிலைக்குப் பின்பும் அந்த ஆட்சிநிலவரை தொடர்பாக அத்தகைய அதிகாரத்தைத் தொடர்ந்து செலுத்திவரும்.

(4) இந்த உறுப்பிலுள்ள எதுவும், ஒரு மாநில உயர் நீதிமன்றத்திற்குள்ள அதிகாரவரம்பை ஒன்றியத்து ஆட்சிநிலவரை அல்லது அதன் பகுதி எதற்கும் நீட்டிக்கச் செய்வதற்கோ, அதனின்றும் அதை நீக்குவதற்கோ, நாடாளுமன்றத்திற்குள்ள அதிகாரத்தைத் திறக்குறைவு செய்வதில்லை.

[1][242. ★★]


  1. 1956 ஆம் ஆண்டு அரசமைப்பு (எழாம் திருத்தம்)ச் சட்டத்தின் 29ஆம் பிரிவினாலும் இணைப்புப் பட்டடியலினாலும் நீக்கறவு செய்யப்பட்டது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Constitution_of_India_in_Tamil_2008.pdf/121&oldid=1467640" இலிருந்து மீள்விக்கப்பட்டது